இந்த அரிய புகைப்படத்தில் இருக்கும் பெண் யார் என்று தெரிகிறதா?
மக்களின் இளவரசி என அழைக்கப்படும் இளவரசி டயானா உயிரிழந்து 26 ஆண்டுகள் ஆகிவிட்டன. நேற்று அவரது நினைவு நாள் அநுசரிக்கப்பட்ட நிலையில், அவரது சகோதரர், தானும் தன் சகோதரி டயானாவும் சிறுவயதில் எடுத்துக்கொண்ட அரிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தில் இருக்கும் பெண் யார் என்று தெரிகிறதா?
அந்த புகைப்படத்தில் இருப்பது இளவரசி டயானாவும், அவரது தம்பியான ஸ்பென்சரும் (Earl Charles Spencer, 59). தன் சகோதரியின் நினைவு நாளையொட்டி, இன்ஸ்டாகிராமில் இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஸ்பென்சர்.
தன்னை அரவணைத்துக்கொண்டிருக்கும் சகோதரியின் புகைப்படத்தை அவர் வெளியிட்டு, அவரது இழப்பை சொல்லாமல் சொல்ல, பலர் அவருக்கு ஆறுதலான வார்த்தைகளைக் கூறியுள்ளார்கள்.
ராஜ குடும்பத்துக்கு புரியவைத்த டயானா
இளவரசர் சார்லசின் மனைவியாக மட்டுமே ராஜ குடும்பம் டயானாவை அறிந்திருந்த நிலையில், அவருக்கு சார்லசுக்குமிடையிலான பிரச்சினைகளை மட்டுமே ராஜ குடும்பம் கவனித்தது.
ஆனால், டயானா கொல்லப்பட்டபோது உலகமெங்கும் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்த கென்சுங்டன் மாளிகைக்கு வந்து குவிந்தபோதுதான், டயானாவின் இன்னொரு முகம் ராஜ குடும்பத்துக்குத் தெரியவந்தது.
Image: Getty
எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும், கண்ணி வெடிகளுக்கெதிராகவும் குரல் கொடுத்து களத்துக்கே சென்று போராடிய டயானாவை ஒரு பக்கம் ஒரு சிங்கப் பெண்ணாகவும், மறுபக்கம் இரண்டு பிள்ளைகளின் தாயாகவும் பார்த்தது உலகம்.
டயானாவை நேரில் பார்க்காதவர்கள், சந்தித்திராதவர்கள் கூட அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக திரண்டபோதுதான், அவர் மக்களுடன் எவ்வளவு பழகியிருக்கிறார் என்பது ராஜ குடும்பத்துக்குப் புரிந்தது. அதனால்தானே இளவரசியான டயானாவின் இடத்தை யார் வந்தாலும் இன்னமும் பிடிக்கமுடியவில்லை!
Image: Max Mumby/Indigo/Getty Images
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |