இனி வாழ்வில் மகிழ்ச்சிதான் என்று கூறும் இளவரசி டயானாவின் கடிதம்: ஆனால் விதி?
இனி வரும் நாட்கள் நன்றாக இருக்கும் என தன் நண்பர்களுக்கு இளவரசி டயானா எழுதிய கடிதங்கள் ஏலத்தில் விடப்பட உள்ளன.
நண்பர்களுக்கு டயானா எழுதிய கடிதங்கள்
இளவரசி டயானா, தனது நெருங்கிய நண்பர்களான Susie மற்றும் Tarek Kassem ஆகியோருக்கு சுமார் 32 கடிதங்கள் எழுதியுள்ளார்.
அவற்றில் சில தற்போது ஏலம் விடப்பட உள்ளன.
Image: Corbis via Getty Images
இனி வரும் நாட்கள் எல்லோருக்கும் நன்றாக இருக்கும்
1996 செப்டம்பர் மற்றும் டிசம்பரில் எழுதப்பட்ட அந்தக் கடிதங்களில் ஒன்றில், 1997ஆம் ஆண்டு நம் எல்லோருக்கும் நல்ல ஆண்டாக இருக்கும் என நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார் டயானா.
அந்த கடிதங்களில் ஒன்று, 1996ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் எழுதப்பட்டுள்ளது. அதாவது, 1996ஆம் ஆண்டு ஆகத்து மாதம் டயானாவும் இளவரசர் சார்லசும் முறைப்படி விவாகரத்து பெற்றார்கள்.
Image: Lay'sAuctioneers/BNPS
அதைத் தொடர்ந்து, 1996ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 17ஆம் திகதி, டயானா அந்த இரண்டாவது கடிதத்தை தனது நண்பர்களுக்கு எழுதியுள்ளார். சார்லசுடன் வாழ்ந்த கடினமான நாட்கள் முடிவுக்கு வந்துவிட்டதால், அடுத்த ஆண்டு, அதாவது 1997ஆம் ஆண்டு நல்ல ஆண்டாக இருக்கும் என நான் நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் டயானா.
டயானாவின் நம்பிக்கையை உடைத்தெறிந்த விதி
ஆனால், டயானா எதிர்பார்த்ததுபோல எதிர்காலம் இனிமையாக இல்லை. அந்தக் கடிதத்தை எழுதும்போது டயானா Hasnat Khan என்பவரைக் காதலித்துவந்தார். அவர் எதிர்பார்த்ததுபோல இல்லாமல், 1997 கோடையிலேயே அதாவது ஜூலை மாதம், அவர்களுடைய காதல் முடிவுக்கு வந்துவிட்டது.
image: AFP/Getty Images
அடுத்து நடந்ததுதான் அனைவருக்கும் தெரியுமே. ஆம், Hasnat Khanஐப் பிரிந்த பிறகு, டோடி ஃபயத் என்பவருடன் பழகிவந்தார் டயானா. அந்த உறவும் வெகு சீக்கிரமே முடிவுக்கு வந்துவிட்டது. 1997ஆம் ஆண்டு, ஆகத்து மாதம் 31ஆம் திகதிதான், டயானாவும் டோடியும் பயணித்த கார் விபத்துக்குள்ளாகி, இருவருமே கொல்லப்பட்டார்கள்.
ஆக, டயானாவின் நம்பிக்கை பொய்த்துப்போய்விட்டது!
Image: Lay'sAuctioneers/BNPS