இளவரசி டயானா தன் காதலருடன் கடைசியாக நேரம் செலவிட்ட படகு: கடலில் மூழ்கும் காட்சிகள்
இளவரசி டயானா விபத்தில் மரணமடையும் முன் தன் காதலருடன் கோடையில் நேரம் செலவிட பயன்படுத்தப்பட்ட படகு, மத்தியதரைக்கடலில் மூழ்கியது.
இளவரசி டயானா தன் காதலருடன் கடைசியாக நேரம் செலவிட்ட படகு
சார்லசைப் பிரிந்த டயானா, டோடி அல் பயத் என்னும் நபருடன் பழகிவந்தார். இருவரும் நிச்சயம் செய்துகொள்ள இருந்ததாகக் கூட கூறப்பட்டது.
அந்த கால கட்டத்தில், டயானாவும் டோடியும், Cujo என்று பெயரிடப்பட்ட 80 அடி நீள சொகுசுப் படகொன்றில் நேரம் செலவிட்டதைக் காட்டும் புகைப்படங்கள் அப்போது வெளியாகியிருந்தன.
Credit: Gendarmerie des Alpes-Maritimes
அந்த படகை, டோடி, 1980களில் உலகின் பணக்கார மனிதர் என் அழைக்கப்பட்ட தனது உறவினரான Adnan Khashoggi என்பவரின் மகனிடமிருந்து விலைக்கு வாங்கியிருந்தார்.
கடலில் மூழ்கிய படகு
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அந்த படகு மத்தியதரைக்கடலில் ஏழு பயணிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த நிலையில், எதன் மீதோ அது மோத, படகில் ஓட்டை விழுந்துள்ளது.
படகின் உரிமையாளர் அதை மீட்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட நிலையிலும், கடலில் சுமார் 2,430 மீற்றர் ஆழத்தில் மூழ்கியது அந்த படகு. படகிலிருந்தவர்கள் உயிர் காக்கும் படகுகள் உதவியுடன் தப்பியுள்ளார்கள்.
அந்த படகை கடைசியாக இத்தாலி நாட்டவரான பணக்காரர் ஒருவர் வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |