இளவரசர் வில்லியமை கருவில் சுமக்கும்போது தற்கொலைக்கு முயன்ற இளவரசி டயானா! 'ரகசிய ஒலிநாடாக்களில்' பதிவு
இளவரசர் வில்லியமை கருவில் சுமக்கும்போது தற்கொலைக்கு முயன்றதாக இளவரசி டயானா தனது 'ரகசிய ஒலிநாடாக்களில்' பதிவு செய்துவைத்துள்ளார்.
நெட்பிலிக்ஸில் வெளியான 'தி கிரௌன்' வலைத்தொடர் இதனை வெளிப்படுத்தியுள்ளது.
இளவரசி டயானா, தற்போது பிரித்தானிய மன்னராக முடிசூடியிருக்கும் மன்னர் சார்லஸ் உடனான திருமண வாழக்கையில் தான் எதிர்கொண்ட மனநல போராட்டங்களை, தனது ரகசிய ஒலிநாடாக்களில் பதிவு செய்து வைத்துள்ளார்.
AP
ரகசிய ஒலிநாடாக்கள்
சமீபத்தில் நெட்பிலிக்ஸில் வெளியான 'தி கிரௌன்' வலைத்தொடரின் சீசன் 5-ல் உள்ள இரண்டாவது எபிசோடு, அதன் ரசிகர்களை இளவரசி டயானாவின் மனநலப் போராட்டங்களுக்குள் அழைத்துச் சென்றது.
டயானாவின் மரணத்திற்கு பின், அவரது ரகசிய ஒலிநாடாக்கள் அவரது நண்பர் ஜேம்ஸ் கோல்தர்ஸ்டிடம் (James Colthurst) கொடுக்கப்பட்டது மற்றும் ஆண்ட்ரூ மோர்டன் (Andrew Morton) தனது புத்தகமான Diana: Her True Story-ல் பயன்படுத்தினார்.
Image credit: Anwar Hussein
தற்கொலை முயற்சி
அப்போது வேல்ஸ் இளவரசியாக இருந்த டயானா தனது ஒலிப்பதிவு ஒன்றில், அவர் இளவரசர் வில்லியமை கருவில் சுமக்கும்போது தற்கொலை முயற்சியாக சாண்ட்ரிங்ஹாமில் படிக்கட்டுகளில் இருந்து கீழே விழுந்ததாக கூறியுள்ளார்.
1995-ஆம் ஆண்டு Martin Bashir நேர்காணலின் போது, டயானா புலிமியா நோயால் (Bulimia) பாதிக்கப்பட்டதைப் பற்றி பேசினார். புலிமியா ஒரு தீவிரமான, உயிருக்கு ஆபத்தான உணவுக் கோளாறு ஆகும்.