கணவருடன் வாழும்போதே காதலருக்கு இளவரசி டயானா எழுதிய கடிதங்கள்: மற்றொரு அவமானம்
இளவரசி டயானா தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து ஆற்றிய பணிகளால் இன்னமும் அவர் ஏராளமானோர் மனங்களில் இடம்பிடித்துள்ளார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அதே நேரத்தில், மக்கள் பணியிலிருந்த ஒரு இளவரசியான டயானாவின் தனிப்பட்ட வாழ்க்கை, ராஜ குடும்பத்துக்கு, குறிப்பாக, மன்னர் சார்லசுக்கும், அதைவிட அதிகமாக, அவருடைய பிள்ளைகளுக்கும் தீராத அவமானமாக அமைந்துவிட்டதையும் மறுக்கமுடியாது.
ராஜ குடும்பத்துக்கு மற்றொரு தலைக்குனிவு
பிரபலங்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை விவாகரத்து செய்துவிட்டு வேறொருவரைத் திருமணம் செய்வது மேலைநாடுகளில் சகஜம்தான். ஆனால், அதே மேலை நாடுகளில், நம் நாடுகளைப்போலவே, திருமணமானவர்கள் தங்கள் கணவன் அல்லது மனைவிக்கு துரோகம் செய்வது ஏற்றுக்கொள்ள இயலாத ஒரு விடயமாகவே உள்ளது.
அவ்வகையில், இளவரசி டயானாவானாலும் சரி, மன்னர் சார்லசானாலும் சரி, திருமணத்தில் இணைந்திருக்கும்போதே தத்தம் துணைக்கு செய்த துரோகங்களை யாரும் மறக்கமுடியாது.
Image: Ron Dadswell/REX/Shutterstock
அவை, தொடர்ந்து ராஜ குடும்பத்துக்கு அவமானத்தைக் கொண்டு வந்துகொண்டே இருக்கின்றன. அவ்வகையில், கணவருடன் வாழும்போதே தன் காதலர் ஒருவருக்கு இளவரசி டயானா எழுதிய கடிதங்கள் ஏலத்தில் விடப்பட இருப்பதாக வெளியாகியுள்ள ஒரு செய்தி, பிரித்தானிய ராஜ குடும்பத்துக்கு மற்றொரு தலைக்குனிவைக் கொண்டுவந்துள்ளது.
அதுவும், கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகிவரும் இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் வாழும் அதே அமெரிக்காவில் அந்த கடிதங்கள் ஏலத்துக்கு விடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
டயானாவின் காதலரின் துரோகம்
இளவரசி டயானா தனது கணவருடன் வாழும்போதே அவருக்கும் Captain James Hewitt என்பவருக்கும் இருந்த தவறான உறவால் டயானாவுக்கு ஏற்கனவே சரி செய்ய இயலாத அளவுக்கு அவமானம் ஏற்பட்டுள்ள நிலையில், டயானா தனக்கு எழுதிய காதல் கடிதங்களை ஜேம்ஸ் ஏலம் விட இருப்பதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜேம்ஸ் வளைகுடா யுத்தக்காலத்தில் போருக்காக சென்றிருந்தபோது, இருவரும் ஒருவருக்கொருவர் காதல் கடிதங்கள் எழுதியுள்ளனர். அவ்வகையில், டயானா ஜேம்ஸுக்கு எழுதிய 64 காதல் கடிதங்களை பயன்படுத்தி ஏற்கனவே ஒருமுறை ஜேம்ஸ் 640,000 டொலர்கள் கடன் பெற்ற விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
தற்போது, மீண்டும் அந்தக் கடிதங்களை ஜேம்ஸ் அமெரிக்காவில் ஏலம் விட இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
Image: Tim Graham Photo Library via Getty Images
அது குறித்து ராஜ குடும்ப எழுத்தாளரான Ingrid Seward கூறும்போது, ஏற்கனவே பலவழிகளில் ஜேம்ஸ் டயானாவை அவமானப்படுத்திவிட்டார். இது அவர் டயானாவுக்குக் கொடுக்கும் இறுதி அவமானம். ஜேம்ஸுக்கு அத்தியாவசியமாகப் பணம் தேவைப்படுகிறது. டயானா எழுதிய கடிதங்களின் மதிப்பு அவருக்குத் தெரியும். ஆனால், அந்த கடிதங்கள் ஏலம் விடப்பட்டு, அவற்றிலுள்ள விடயங்கள் வெளிவருமானால், ராஜ குடும்பம் இப்போது இருக்கும் நிலையில், அவை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்கிறார்.
ஆனால், ஜேம்ஸின் செய்தித்தொடர்பாளர் ஒருவர், அந்தக் கடிதங்களை ஏலம் விடும் திட்டம் எதுவும் ஜேம்ஸுக்கு இல்லை, அவற்றின் மதிப்பு என்ன என்பதைத் தெரிந்துகொள்வதற்காகவே அவர் ஏல நிறுவனம் ஒன்றை நாடியுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |