இளவரசி டயானாவின் மரண காட்சியை படமாக்கிய நெட்ஃபிக்ஸ் வலைத்தொடர்! வைரலாகும் புகைப்படங்கள்
இளவரசி டயானாவின் மரணக் காட்சி பாரிஸில் விபத்து நடந்த இடத்திற்கு அருகில் படமாக்கப்பட்டுள்ளது.
இப்போது வைரலாகும் படங்களில், ஒரு Mercedes-Benz கார் பான்ட் டி எல்'அல்மா சுரங்கப்பாதையை நோக்கிச் செல்வதைக் காணலாம்.
நெட்ஃபிக்ஸ் தயாரிக்கும் ராயல் தொடரான 'தி கிரவுன்' (The Crown) தற்போது அதன் ஆறாவது மற்றும் கடைசி சீசனை படமாக்கி வருகிறது.
அதற்காக சமீபத்தில், பாரிஸ் நகரத்தில், இளவரசி டயானாவின் துயர மரணத்தை படமாக்க, உண்மையிலேயே டயானா கார் விபத்து நடந்த அதே இடத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
மறைந்த இளவரசி டயானாவின் வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவங்களை சித்தரிப்பதற்காக நிகழ்ச்சி வெகுதூரம் சென்றுவிட்டதாக விமர்சனங்கள் மற்றும் பின்னடைவுகள் இருந்த போதிலும், இந்த வலைத்தொடரின் தயாரிப்பாளர்கள் ஆபத்தான கார் விபத்தை தொடர்ந்து படமாக்கினர்.
படப்பிடிப்பின் பொது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்துள்ளன. பாரிஸில் உள்ள பான்ட் டி எல்'அல்மா சுரங்கப்பாதையில் விபத்தின் காட்சிகளை அப்படியே மீண்டும் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
© Tiziano Da Silva / Bestimage
1997-ல் டயானாவின் ஓட்டுநர் பாப்பராசி புகைப்பட கலைஞர்களால் பின்தொடர்ந்தபோது விபத்துக்குள்ளானார்.பாரிஸில் விபத்து நடந்த இடத்திற்கு அருகில் டயானாவின் துயர மரணத்தை 'தி கிரவுன்' மீண்டும் உருவாக்குகிறது.
மிகவும் எதிர்பார்க்கப்படம் இந்த வலைத்தொடரின் ஐந்தாவது சீசன் நெட்ஃபிக்ஸில் நவம்பர் 9-ஆம் திகதி வெளியாகிறது.
La production de la série « The Crown » a commencé à filmer les scènes de l’accident de voiture mortel de la princesse Diana dans le tunnel du pont de l'Alma à Paris pic.twitter.com/QUTYaji8PQ
— Kunta van den Kinté (@denkinte_2) October 27, 2022
தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், Mercedes-Benz காரை சுற்றி மோட்டார் சைக்கிள்களில் ஏராளமான புகைப்படக் கலைஞர்கள் சுரங்கப்பாதையை நோக்கிச் செல்வதைக் காட்டுகின்றன.
ஆனால், உண்மையான விபத்தின் தாக்கங்கள் காட்டப்படாது என்று Netflix செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
