ரூ.7 கோடிக்கு ஏலம்போன டயானாவின் தனிப்பட்ட கடிதங்கள்
இளவரசி டயானாவின் தனிப்பட்ட கடிதங்கள், இளவரசர் சார்லஸிடமிருந்து விவாகரத்து பெற்ற அவநம்பிக்கையை வெளிப்படுத்திய கடிதங்கள் ரூ. 7 கோடிக்கு விற்கப்பட்டன.
ரூ. 7 கோடிக்கு
பிரித்தானிய இளவரசி டயானா பயன்படுத்திய பொருள்கள் சில அவ்வப்போது ஏலம் விடப்படுகின்றன. சமீபத்தில் மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் மறைந்த இளவரசி டயானாவின் திருமணத்தின்போது, டயானா உடுத்திய கவுன் ஒன்று ரூ.22 கோடிக்கு (இலங்கை பணமதிப்பில்) ஏலம் போனது.
இந்த நிலையில், அப்போது வெல்ஸ் இளவரசராக இருந்த சார்லஸுடனான விவாகரத்தின்போது இளவரசி டயானா தன் நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு தற்போது ஏலம் விடப்பட்து.
Getty Images
சூசி (Susie), தாரேக் கஸ்ஸெம் (Tarek Kassem) என அறியப்படும் தனது நெருங்கிய தோழிகளுக்கு டயானா எழுதிய இந்தக் கடிதங்கள், `டயானா, தி பிரைவேட் கரெஸ்பாண்டன்ஸ் ஆஃப் எ பிரின்செஸ் (Diana, The Private Correspondence of a Princess) என்று பெயரிடப்பட்டுள்ளது.
Lay's ஏலதாரர்களால் ஏலம் விடப்பட்ட இந்தக் கடிதத் தொகுப்பு, இலங்கை பணமதிப்பில் சுமார் 7 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.
கடிதங்களில்..,
ஏலம் விடப்பட்ட கடிதங்களில் பிப்ரவரி 17, 1996 தேதியிட்ட கஸ்ஸெமுக்கு எழுதிய ஒரு கடிதத்தில், "என்னிடம் மொபைல் இல்லாததால், எனது வரிகள் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு அனுப்பப்படுவதால், தனிப்பட்ட பிரச்சனைகளைப் பற்றி விவாதிப்பது கடினம்.
இந்த விவாகரத்தின் மூலம் நான் என்ன அனுபவிப்பேன் என்று ஒரு வருடத்திற்கு முன்பே எனக்குத் தெரிந்திருந்தால், நான் ஒருபோதும் சம்மதித்திருக்க மாட்டேன். இது அவநம்பிக்கையானது மற்றும் அசிங்கமானது" என டயானா எழுதியிருக்கிறார். இந்தக் கடிதம் ஏறக்குறைய 28,000 பவுண்டுகள் கட்டணத்துடன் விற்கப்பட்டது.
வேல்ஸ் இளவரசியின் நெருங்கிய நண்பர்களான சூசி மற்றும் தாரெக் காசெம் ஆகியோர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கடிதங்களை பொக்கிஷமாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
ஏல நிறுவனம் ஒரு அறிக்கையில், "சில கடிதங்கள் மிகவும் பகிரங்கமாக இதயத்தை உடைக்கும் காலங்களில் அவள் அனுபவித்த மகத்தான மன அழுத்தத்தைத் தொடுகின்றன, இருப்பினும் அவளுடைய குணத்தின் வலிமையும் அவளுடைய தாராளமான மற்றும் நகைச்சுவையான மனநிலையும் பிரகாசிக்கின்றன." என்று தெரிவித்தது.