பிரித்தானிய ராஜ குடும்பத்தில் இன்று ஒரு இளவரசிக்கு பிறந்தநாள்: அவர் யார் தெரியுமா?
பிரித்தானிய ராஜ குடும்பத்தில் இன்று ஒருவருக்கு பிறந்தநாள். ஆனால், யாரும் அதைக்குறித்து அதிகம் பேசியதுபோல் தெரியவில்லை!
யார் அவர்?
இன்று, இளவரசர் ஹரி, மேகன் தம்பதியரின் இரண்டாவது மகளான லிலிபெட்டுக்கு பிறந்தநாள். லிலிபெட், இன்று தனது மூன்றாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

Credit: Alexi Lubomirski
பிரித்தானியாவில் அந்த குட்டி இளவரசியின் பிறந்தநாள் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதோ தெரியாது. ஆனால், ஹரி மேகன் தம்பதியர் வாழும் சான்டா பார்பராவில், கடந்த வார இறுதியிலேயே பிறந்தநாள் கொண்டாட்டங்கள் துவங்கிவிட்டன.

Credit: Not known, clear with picture desk
ஹரி மேகன் தம்பதியர் பிரித்தானியாவிலிருக்கும்போது, அவர்களுடைய மூத்த மகனான ஆர்ச்சி பிறக்க, லிலிபெட் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பிறந்தாள்.

Credit: PA
குட்டி இளவரசியின் முழுப்பெயர் லிலிபெட் டயானா மௌண்ட்பேட்டன் விண்ட்ஸர் என்பதாகும். ஹரி தன் பாட்டியாகிய எலிசபெத் மகாராணியின் நினைவாக தன் மகளுக்கு லிலிபெட் என்றும், தன் தாயாகிய டயானா நினைவாக டயானா என்றும் பெயர் வைத்தது குறிப்பிடத்தக்கது.

Credit: Google Earth

Credit: Getty

Credit: Netflix
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |