மன்னிப்பு கேட்ட இளவரசி கேட்! ஐரிஷ் காவலர்கள் நெகிழ்ச்சி

Thiru
in ஐக்கிய இராச்சியம்Report this article
ஐரிஷ் காவலர்கள் படையினரிடம் பிரித்தானியாவின் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் மன்னிப்பு கேட்டுள்ளார்.
மன்னிப்பு கோரிய இளவரசி கேட்
வேல்ஸ் இளவரசி இன்று நடந்த ட்ரூப்பிங் தி கலர் ஒத்திகை(Trooping the Colour rehearsal) நிகழ்வான "கர்னல்ஸ் ரிவ்யூ”(Colonel's Review) வை தவறி விட்டதற்காக ஐரிஷ் காவலர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
லண்டனில் உள்ள ஹார்ஸ் கார்ட்ஸ் பாரேட் மைதானத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.
கடந்த ஆண்டு இளவரசர் வில்லியமிடம் இருந்து ஐரிஷ் காவலர்களின் கர்னல் பதவியை ஏற்றுக்கொண்ட கேட், தற்போது புற்றுநோய் சிகிச்சையில் இருந்து மீண்டு வருகிறார்.
இதனால், வழக்கமாக அவர் செய்வது போல் படையினரை பார்வையிட முடியவில்லை.
கடித விவரம்
ட்ரூப்பிங் தி கலர் விழாவிற்கு தயாராகும் முழு லெஜிமெண்ட்டையும் பார்த்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.”
“அனைவரும் தங்கள் பயிற்சி மற்றும் சீருடைகளை சிறப்பாக செய்ய பல மணிநேரங்களை செலவிட்டுள்ளனர் என்பதை நான் அறிவேன்.”
"இந்த ஆண்டு கர்னல்ஸ் ரிவ்யூவை தவற விட்டதற்கு வருத்தமாக இருந்தாலும், உங்கள் கர்னலாக இருப்பது எனக்கு பெருமை.”
"என் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள், மீண்டும் உங்கள் அனைவருக்கும் பிரதிநிதியாக இருக்க நான் விரும்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
இந்த கடிதத்தால் ஐரிஷ் காவலர்கள் மிகவும் நெகிழ்ந்தனர் என்று அவர்கள் ஆன்லைனில் பகிர்ந்த வீடியோ மூலம் தெரியவருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |