மூன்று குழந்தைகளைப் பெற்றபின் இளவரசி கேட் பின்பற்றவேண்டியிருந்த கடுமையான விதி
பிரித்தானிய இளவரசி கேட் தனது மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்தபின்பும், கடுமையான ராஜ குடும்ப மரபொன்றைப் பின்பற்றவேண்டியதாயிருந்தது.
இளவரசி கேட் பின்பற்றவேண்டியிருந்த கடுமையான விதி
ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்ததும், தன் கணவனுக்கு அடுத்தபடியாக, அந்த செய்தியைத் தன் பெற்றோருக்குச் சொல்லத்தான் எந்த பெண்ணும் விரும்புவாள், குறிப்பாக, தன் தாய்க்கு... அது இயற்கை.
ஆனால், இளவரசி கேட்டுக்கு மூன்று குழந்தைகள் பிறந்த நிலையில், ஒருமுறைகூட அவர் அந்த செய்தியை தன் பெற்றோருக்கு முதலில் கூறவில்லை.
அதற்குக் காரணம், கடுமையான ஒரு ராஜ குடும்ப பட்டுப்பாடு. ஆம், ராஜ குடும்ப மரபுப்படி, ராஜ குடும்பத்தில் ஒரு குழந்தை பிறந்தால், அந்த செய்தி முதலில் நாட்டை ஆளும் மன்னர் அல்லது ராணிக்குத்தான் தெரியப்படுத்தப்படவேண்டும்.
ஆகவே, யாரும் ஒற்றுக்கேட்க முடியாத, ஒரு தன் தொலைபேசி மூலம், இளவரசர் வில்லியம், தங்களுக்குக் குழந்தை பிறந்த செய்தியை முதலில் மகாராணியார் இரண்டாம் எலிசபெத்துக்குத் தெரிவித்துள்ளார்.
அதன்பின்பே, இளவரசி கேட், தனக்குக் குழந்தை பிறந்த செய்தியை தன் பெற்றோருக்குத் தெரிவித்துள்ளார்.
இன்னொரு முக்கியமான விடயம், இளவரசிக்கு பிரசவம் பார்க்கும் மருத்துவமனை ஊழியர்களும், அவருக்குக் குழந்தை பிறந்த விடயத்தை யாருக்கும் கூறக்கூடாது என கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |