இளவரசி கேட்டுக்கு புற்றுநோய் இருப்பதாக கூறப்படுவதில் உண்மையில்லை: சர்ச்சையை உருவாக்கியுள்ள அமெரிக்கர்
இளவரசி கேட்டுக்கு புற்றுநோய் இருப்பதாக கூறப்படுவதை தான் நம்பவில்லை என்று கூறியுள்ளார் அமெரிக்க பல்கலை ஒன்றில் பணியாற்றும் ஒருவர்.
இளவரசி இறந்திருக்கலாம்
ஹரியின் மனைவியாகிய மேகனுடைய தீவிர ரசிகரும், அமெரிக்கப் பல்கலை ஒன்றின் துறை ஒன்றின் இயக்குநருமான ஜோனத்தன் (Johnathan Perkins) என்பவர், இளவரசி கேட்டுக்கு புற்றுநோய் இருப்பதாக கூறப்படுவதை தான் நம்பவில்லை என்று கூறியுள்ளார்.
அவர் இறந்திருக்கலாம் அல்லது கோமாவில் இருக்கலாம் என்றும் சர்ச்சைக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார் ஜோனத்தன்.
நீண்ட காலமாக இளவரசி கேட் வெளியே தலைகாட்டாததால், அதை திசைதிருப்பவே ராஜ குடும்பம் இளவரசி கேட் தனக்கு புற்றுநோய் என்று கூறும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளதாகவும் கூறுகிறார் ஜோனத்தன்.
மேகனுடைய தீவிர ரசிகர்
இந்த ஜோனத்தன், ஹரியின் மனைவியாகிய மேகனுடைய தீவிர ரசிகர் ஆவார். இளவரசி கேட்டைக் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுள்ள அவர், மேகனுடைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, அவரை ஆஹா ஓஹோவென புகழ்ந்துள்ளார்.
மேகனை ஒரு அமெரிக்க இளவரசி என எக்ஸில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் புகழ்ந்துள்ளார் ஜோனத்தன். இளவரசி கேட்டைக் குறித்து மட்டுமல்ல, வேறு சில பிரபலங்களையும் குறித்து சர்ச்சைக் கருத்துக்களை வெளியிட்டுள்ள ஜோனத்தன், அதை வழக்கமாகவே கொண்டுள்ளார்.
அவர் சார்ந்த பல்கலை, அவரது கருத்துக்களுக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என மறுப்புத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
FYI, this is an American Princess Meghan Markle stan account ✊?✊?✨?? pic.twitter.com/TyrHrYZg1N
— Jay P (@JohnathanPerk) March 27, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |