மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளவரசி கேட்: சமூக ஊடகங்களில் வெளியாகிவரும் மோசமான விமர்சனங்கள்
பிரித்தானிய இளவரசர் வில்லியமுடைய மனைவியாகிய இளவரசி கேட், உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஹரி மேகன் தம்பதியரின் ரசிகர்கள் அவரைக் குறித்து சமூக ஊடகங்களில் மோசமாக விமர்சித்து வருகிறார்கள்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளவரசி
பிரித்தானிய இளவரசி கேட், உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அறுவை சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அவர் சுமார் இரண்டு வாரங்கள் மருத்துவமனையில் தங்கியிருக்கவேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.
Image: Getty
ஒருவர் அறுவை சிகிச்சைக்குப் பின் இரண்டு வாரங்கள் மருத்துவமனையில் தங்கியிருக்கவேண்டுமானால், நிச்சயம் அது பெரிய பிரச்சினையாகத்தான் இருக்கவேண்டும். அவருக்கு என்ன பிரச்சினை என்பதைக் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், அவரது வயிற்றில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்றும், அவருக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை புற்றுநோய் சம்பந்தமானது அல்ல என்றும் மட்டும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசமாக விமர்சிக்கும் ஹரி மேகன் ரசிகர்கள்...
இந்நிலையில், இளவரசர் ஹரி மேகன் தம்பதியரின் ரசிகர்கள், இளவரசி கேட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறித்து மோசமான கருத்துக்களை சமூக ஊடகங்களில் பதிவு செய்து வருகிறார்கள்.
அவருக்கு இது வேண்டியதுதான், ஹரி மேகனுக்கு கொடுத்த கஷ்டத்துக்கு கேட் பலன் அனுபவிக்கும் நேரம் இது, என்னும் தோரணையில் பலர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Image: Getty
பிரபல ஊடகவியலாளர் கோபம்
இளவரசி கேட் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரைக் குறித்து ஹரி மேகன் ரசிகர்கள் மோசமான கருத்துக்களை வெளியிட்டு வருவது அருவருக்கததாக உள்ளது என்று கூறியுள்ளார் The Daily Mail ஊடக ஆசிரியர்களில் ஒருவரான Richard Eden என்பவர்.
Image: Getty
அவரது கருத்தை பலரும் ஆமோதித்துள்ள நிலையில், சிலரோ, ஹரி மேகன் குறித்து வில்லியம் கேட் தம்பதியரின் ரசிகர்கள் மோசமாக விமர்சித்தபோது, அது உங்களுக்கு அர்வருப்பாக தெரியவில்லையா, அதைக் குறித்து செய்தி வெளியிடமாட்டேன்கிறீர்களே, இப்படிப்பட்ட மோசமான சூழ்நிலைக்கு உங்களைப்போன்ற ஊடகவியலாளர்கள்தான் காரணம் என குறிப்பிட்டுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |