மருத்துவமனையில் இருந்து வெளியேறிய இளவரசி கேட்: வெற்றிகரமாக முடிந்த அறுவை சிகிச்சை
வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் தனது வெற்றிகரமான அறுவை சிகிச்சை பிறகு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.
முடிந்த அறுவை சிகிச்சை
இளவரசி கேட் ஜனவரி 16 அன்று வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை செய்ய லண்டன் கிளினிக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதன்படி அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
வேல்ஸ் இளவரசி தனது அறுவை சிகிச்சைக்குப் பிறகு 13 இரவுகள் மருத்துவமனையில் தங்கியிருந்த நிலையில், வீடு திரும்பியுள்ளார்.
கென்சிங்டன் அரண்மனையின் அறிக்கையில், இளவரசி இப்போது விண்ட்சரில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பியுள்ளார் என்றும் அவர் "நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறார்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடில்டன், லண்டன் கிளினிக் மருத்துவமனைக்கு நன்றி தெரிவித்துள்ளார். அங்கு இவர்களுக்கு உதவிய தாதியாருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.
மேலும் மார்ச் 31 ஆம் திகதி வரையில் இளவரசி கேட் எந்தவொரு பொது நிகழ்ச்சியிலும் பங்கேற்க மாட்டார் என அரண்மனை சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
A statement from Kensington Palace pic.twitter.com/DW6BOHuuRJ
— The Prince and Princess of Wales (@KensingtonRoyal) January 29, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |