இளவரசி கேட்டிடம் விளையாட்டு வீராங்கனை ஒருவர் கூறிய ரகசியம்... இளவரசியின் வெட்க ரியாக்ஷன்
பிரித்தானிய இளவரசி கேட் ஒரு ரக்பி விளையாட்டுப் பிரியை என்பது பலருக்கும் தெரிந்த விடயம். அப்படி ஒரு முறை ரக்பி விளையாட்டுப் பயிற்சில் கலந்துகொண்ட இளவரசி கேட்டிடம் முன்னெச்சரிக்கையாக ஒரு இரகசியத்தைச் சொன்னார் விளையாட்டு வீராங்கனை ஒருவர்.
இளவரசியை எச்சரித்த விளையாட்டு வீராங்கனை
ரக்பி விளையாட்டின் ஒரு பகுதியாக, ஒரு வீரர் அல்லது வீராங்கனையை சக வீரர் அல்லது வீராங்கனைகள் தூக்கிப் பிடிக்கவேண்டும்.
என்னதான் தங்களுடன் சகஜமாக விளையாடினாலும், கேட் வருங்கால மன்னரின் மனைவியாயிற்றே. ஆகவே, முன்னெச்சரிக்கையாக ஒரு பெண் கேட்டிடம் ஒரு ரகசியத்தைக் கூறினார்.
HELLO! Magazine
அதைக் கேட்ட இளவரசி கேட் விழுந்து விழுந்து சிரிக்க, சக வீரர்களும் சிரிக்க, அந்த இடமே சிரிப்பலையில் மூழ்கியது.
அது என்ன ரகசியம்?
அதாவது, ரக்பி பயிற்சியின்போது இளவரசி கேட்டை சக வீரர்கள் தூக்கிப் பிடிக்கவேண்டும். அதற்கு, இளவரசியை தூக்கும் வீராங்கனை ஒருவர் அவரது பின்பக்கத்தைத் தொட்டுத்தான் ஆகவேண்டும்.
mirror
ஆகவேதான் மெதுவாக அவரிடம், தான் அவரது பின்பக்கத்தைத் தொடவேண்டியிருக்கும் என முன்னெச்சரிக்கையாக அந்த வீராங்கனை தெரிவிக்க, அதைக் கேட்டுத்தான் அப்படி விழுந்து விழுந்து சிரித்தார் கேட்.
mirror
ஆக, இரண்டு பேர் சேர்ந்து இளவரசியைத் தூக்க, அப்படியும் நாணத்தில் ’ஊ’ என கத்திவிட்டார் கேட். இதற்கிடையில், இளவரசியைத் தூக்கிவிட்டேன் என அவரைத் தூக்கிய வீரர் ஒருவர் தன் சந்தோஷத்தை வெளிப்படுத்துவதையும் காணமுடிந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |