கல்லூரி பருவத்தில் இளவரசர் வில்லியமை பிரிந்தபோது கேட் காதலித்த ரகசிய காதலர்...
இளவரசர் வில்லியம், இளவரசி கேட் தம்பதியரின் காதல் கதை, ஒரு சுவாரஸ்ய கதை. இப்போதும் அது குறித்து எழுதுவதில் பிரித்தானிய ஊடகங்கள் மகிழ்ச்சி கொள்கின்றன.
அவ்வகையில், இளவரசர் வில்லியமும் கேட்டும் காதலித்த காலகட்டத்தில் ஒரு சிறு பிரிவு ஏற்பட்டதைக் குறித்த ஒரு செய்தி தற்போது வெளியாகியுள்ளது.
ஆறு வருட காதலுக்குப் பிறகு பிரிவு
இளவரசர் வில்லியம் ஸ்கொட்லாந்தின் தலைநகரான எடின்பர்கில் அமைந்துள்ள புனித ஆண்ட்ரூ பல்கலையில் படிக்கும்போது, அவருடன் படித்தவர்தான் கேட் மிடில்டன். ஒரே கட்டிடத்தின் வெவ்வேறு அறைகளில் தங்கியிருந்தாலும், ஒரு ஃபேஷன் ஷோவில் கேட் அணிந்துவந்த உடை வில்லியமை ஈர்க்க, பின்னர் இருவரின் நட்பும் காதலாக, சுமார் ஆறு ஆண்டுகள் இருவரும் பழகிவந்துள்ளார்கள்.
Image: CAMERA PRESS
ஆனால், 2007ஆம் ஆண்டு, இருவரும் பிரிந்துவிட்டதாக வதந்திகள் பரவத் துவங்கின.
இளவரசர் வில்லியமை பிரிந்தபோது இளவரசி கேட் காதலித்த ரகசிய காதலர்...
இளவரசர் வில்லியமும் கேட்டும் பிரிந்ததாக வதந்திகள் பரவிக்கொண்டிருந்த நேரத்தில், கேட் வேறொரு இளைஞருடன் சுற்றும் புகைப்படங்களும் வெளியாகி எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றின.
அப்படி கேட்டுடன் சுற்றிய அந்த நபரும் சாதாரண ஆள் இல்லை. அவரது பெயர் Henry Ropner. 33.7 மில்லியன் பவுண்டுகள் சொத்து மதிப்புடைய கப்பல் கட்டும் நிறுவனம் ஒன்றின் வாரிசான Henry, இளவரசர் வில்லியமுடைய பள்ளித்தோழர்களில் ஒருவர் ஆவார்.
காதலை வலுவாக்கிய பிரிவு
ஆனால், இளவரசர் வில்லியம், கேட் பிரிவு நீண்டகாலம் நீடிக்கவில்லை. அந்த பிரிவு தங்கள் காதலை வலிமையாக்கியதாக பின்னாட்களில் இருவருமே கூறியுள்ளார்கள்.
Image: AFP/Getty Images
அத்துடன், அவர்களை நன்கறிந்தவர்களும்கூட, இளைஞர்கள் பெண்களுடன் சுற்றுவது கல்லூரி காலகட்டத்தில் சகஜமாக இருந்தபோதும்கூட, வில்லியம் பெண்களைத் தொட்டதில்லை என்கிறார்கள். அத்துடன், மிக அழகான பெண்ணாக இருந்தும் அவ்வளவு தன்னடக்கமான பெண்ணாக இருந்த கேட்டுடைய இடத்தில் வேறு யாரையும் பொருத்திப் பார்க்க வில்லியமால் முடியவில்லை என்கிறார் ராஜ குடும்ப நிபுணரான Richard Compton Miller என்பவர்.
அப்புறம் என்ன, அதே 2007 ஏப்ரலில், பிரிந்த ஜோடி ஒன்று சேர, இன்று வருங்கால மன்னரை பெற்றெடுத்து வளர்த்து வருகிறார், வருங்கால மன்னரான இளவரசர் வில்லியமுடைய மனைவி கேட்.
Image: AFP/Getty Images
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |