இளவரசி கேட் எங்கே? விவாகரத்து முதல் இணையத்தில் உலாவரும் பல்வேறு வதந்திகள்...
பிரித்தானிய இளவரசர் வில்லியமுடைய மனைவியான இளவரசி கேட், உடல் நலம் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பி ஓய்வெடுத்து வருவதாக செய்திகள் வெளியானது நினைவிருக்கலாம்.
இந்நிலையில், அடிக்கடி ஊடகங்களில் வெளியாகும் இளவரசியின் புகைப்படங்களோ, அல்லது அவர் குறித்த செய்திகளோ வெளியாகாததால், அவருக்கு என்ன ஆயிற்று என மக்கள் கேள்வி எழுப்பத் துவங்கியுள்ளார்கள்.
இணையத்தில் உலாவரும் பல்வேறு வதந்திகள்
அதாவது, இளவரசி கேட்டும் இளவரசர் வில்லியமும் விவாகரத்து செய்து பிரிந்திருக்கலாம் என்பது முதலான பல்வேறு வதந்திகள் இணையத்தில் உலாவருகின்றன.
Image: Tim Rooke/REX/Shutterstock
ஒருவர், ஒருபடி மேலே போய், இளவரசி கேட் அழகியல் சிகிச்சை செய்துகொண்டு வீட்டில் ஓய்வெடுப்பதாக கருத்துக்கூற, மற்றொருவரோ, இளவரசி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி, வீட்டில் ஓய்வெடுப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், அவர் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்படும் புகைப்படங்கள் வெளியாகவே இல்லையே என்று சந்தேகம் எழுப்பியுள்ளார்.
Image: Getty Images
சமீபத்தில், இறுதிச்சடங்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருந்த இளவரசர் வில்லியம், பாதியிலேயே சொந்த வேலை இருப்பதாகக் கூறி வெளியேற, அதையும் பிடித்துக்கொண்டார்கள் இணையவாசிகள்.
Image: Getty Images
கடைசியாக, கூகுளுடைய AI chatbot Geminiயிடமே இது குறித்து கேள்வி எழுப்பியது ஒரு பிரித்தானிய ஊடகம். அதற்கு பதிலளித்த ஜெமினி, சமீபத்திய செய்திகளின் அடிப்படையில், வேல்ஸ் இளவரசியான கேத்தரின், இங்கிலாந்தின் விண்ட்ஸரிலுள்ள அவரது வீட்டில், உடல் நல பாதிப்பிலிருந்து மீண்டு வருகிறார் என்று கூறியுள்ளது.
not a single banksy since kate middleton disappeared. coincidence?
— Lucy (@LMAsaysno) February 27, 2024
இளவரசி கேட்டுக்கு வயிற்றில் ஒரு பெரிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் ஓய்வெடுக்கவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், ஈஸ்டர் பண்டிகை வரை அவர் பணிக்குத் திரும்பமாட்டார் என அரண்மனை வட்டாரம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Image: Jenny Fogarty / SWNS
Image: Getty Images
Image: UK Press via Getty Images
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |