இளவரசி கேட் புகைபிடிக்கும் பழக்கம் உடையவரா? சர்ச்சையை உருவாக்கியுள்ள இந்தியப் பெண் பிரபலம்
பிரபல தொலைக்காட்சிப் பிரபலமான ஒரு பெண், இளவரசி கேட் புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவரா என சந்தேகம் எழுப்பிய விடயம் இணையத்தில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
சர்ச்சையை உருவாக்கியுள்ள இந்தியப் பெண் பிரபலம்
தொலைக்காட்சி பிரபலமான நரிந்தர் கௌர் என்பவர், சமூக ஊடகமான எக்ஸில், இளவரசி கேட்டுக்கும் வெறும் 42 வயதுதானே ஆகிறது, அப்புறம் ஏன் ஆவர் மிகவும் வயதானவர் போல காட்சி அளிக்கிறார்?
What is with leftie commentators like @narindertweets who are just utterly vile and nasty! pic.twitter.com/5yDYx2SL9u
— Goldsmith Ave Survivor (@MajorRaverMatt) November 10, 2024
அவர் புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவரா? புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்கள்தான் இப்படி வயதானவர்கள் போல காட்சி அளிப்பார்கள் என குறிப்பிட்டிருந்தார்.
அவரது கருத்துக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை முடிந்த நிலையில் இளவரசியை கௌர் இப்படி விமர்சித்திருக்கக்கூடாது என பலரும் கண்டனம் தெரிவித்திருந்தார்கள்.
உடனே, நான் சாதாரணமாகத்தான் ஒரு கேள்வியைக் கேட்டேன், எனது சகோதரர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆனால், அவர் இப்படி வயதானவர் போல ஆகவில்லை, அவர் இறந்துவிட்டார்.
நான் ஒரு இந்தியப் பெண் என்பதால்தான் என் சாதாரண கேள்விக்காக எல்லாரும் என் மீது இப்படி கோபப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார் கௌர்.
ஆனால், உங்கள் இனத்தைக் குறித்து யாருக்கும் கவலையில்லை, இப்போதுதான் கீமோ சிகிச்சை முடித்த ஒரு பெண்ணைக் குறித்து ஒரு முட்டாள்தனமான கேள்வியை நீங்கள் கேட்டதால்தான் உங்களை விமரிசிக்கிறார்கள் என்று கூறியுள்ளார் ஒருவர்.
பின்னர், தான் கேள்வி கேட்ட விதம் தவறானது என ஒப்புக்கொண்ட கௌர், அதனால் ஏற்பட்ட வேதனைக்காக மன்னிப்பும் கேட்டுக்கொண்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |