திடீரென இளவரசர் வில்லியமை விட்டுவிட்டு ஓடிய இளவரசி கேட்: எதற்காக என்று பாருங்கள்...
சமீபத்தில், இளவரசர் வில்லியமும் அவரது மனைவி கேட்டும் பொதுமக்களை சந்தித்துவிட்டு புறப்பட இருந்த நேரத்தில், இளவரசரை விட்டுவிட்டு இளவரசி கேட் மட்டும் ஓடும் வீடியோ ஒன்று கவனம் ஈர்த்துள்ளது.
அவர் எதற்காக ஓடினார் என்பது இந்த வீடியோவைப் பார்த்தால்தான் புரிகிறது.
இளவரசர் வில்லியமும் அவரது மனைவி கேட்டும், சமீபத்தில் பொதுமக்களை சந்தித்துவிட்டு புறப்பட இருந்த நேரத்தில், இளவரசரை விட்டுவிட்டு இளவரசி கேட் மட்டும் ஓடும் வீடியோ ஒன்று கவனம் ஈர்த்துள்ளது.
எதற்காக கேட் இப்படி ஓடுகிறார் என்று வில்லியம் பார்க்க, அங்கே ஒரு பெண் தன் குழந்தையுடன் நிற்கிறார், அவரைக் காணத்தான் ஓடியுள்ளார் கேட் என்பது வில்லியமுக்கு மட்டுமல்ல நமக்கும் புரிகிறது.
The Princess of Wales has her priorities straight. They were just about to leave but she saw a baby and obviously had to go over to say hello ?? pic.twitter.com/mpQObOJZg6
— Isa (@isaguor) October 6, 2022
பொதுவாகவே இளவரசர் வில்லியமும் கேட்டும் குழந்தைகள் மீது மிகவும் பிரியம் கொண்டவர்கள். ஆனாலும், வந்த வேலையை முடித்துவிட்டு திரும்பும்போதும், அந்தப் பெண் தன் குழந்தையுடன் தங்களைக் காண வந்திருப்பதை உணர்ந்த கேட், வில்லியமிடம் கூட சொல்லாமல் ஓடுகிறார்.
பிறகு அந்தக் குழந்தையையும் தன் தாயையும் சந்தித்துவிட்டு பிறகுதான் புறப்பட்டிருக்கிறார்கள் இருவரும்.
அந்தக் குழந்தையைக் காண கேட் ஓடுவதையும், அதைக் கண்ட மக்கள் சந்தோஷக் குரல் எழுப்புவதையும் வெளியாகியுள்ள வீடியோவில் காணலாம்.
அந்தப் பெண்ணின் பெயர் லாராவாம். அவர் ராஜகுடும்பத்தின் தீவிர ரசிகராம். இதற்கு முன் இந்த விடயம் இளவரசி கேட்டுக்குத் தெரியாவிட்டாலும், இந்த சம்பவத்திற்குப் பின் லாராவின் முகம் அவருக்கு நிச்சயம் நன்கு பரிச்சயமாகிவிடும் என்கிறார்கள் மக்கள்!