மனைவியை சந்திக்க அப்பாயின்ட்மெண்ட்... கணவரை பிரிந்து சுவிட்சர்லாந்தில் வாழும் இளவரசி
மொனாக்கோ நாட்டின் இளவரசி, தன் கணவரைப் பிரிந்து சுவிட்சர்லாந்தில் வாழ்வதாகவும், அவரது கணவர் தன் மனைவியை சந்திக்கவேண்டுமானால் கூட, அப்பாயிண்ட்மெண்ட் வாங்கவேண்டும் என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கணவரை பிரிந்து சுவிட்சர்லாந்தில் வாழும் இளவரசி
மொனாக்கோ இளவரசியான சார்லீன் (45), தன் கணவரான இளவரசர் ஆல்பர்ட்டைப் (65) பிரிந்து சுவிட்சர்லாந்தில் வாழ்வதாக ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Credit: Getty
இளவரசி சார்லீன், கோடையை தனது கணவர் மற்றும் எட்டு வயது இரட்டையர்களான தங்கள் பிள்ளைகள் ஜாக் மற்றும் கேப்ரியெல்லாவுடன் உல்லாசப் படகொன்றில் செலவிட்டார்.
Credit: Reuters
ஆனால், அதற்குப் பின் அவர் மொனாக்கோ நாட்டுக்குத் திரும்பவில்லை, அவர் சுவிட்சர்லாந்தில் தனியாக வாழ்ந்துவருவதாக கூறப்படுவதால், அவர்களுடைய திருமண வாழ்வில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுவருகின்றன.
தம்பதியருக்கு நெருக்கமான ஒருவர், அவர்கள் இப்போது வெளி உலகுக்கு மட்டுமே தம்பதியராக வாழ்வதாகவும், பொது நிகழ்ச்சிகளில் மட்டுமே இணைந்து கலந்துகொள்வதாகவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Credit: Getty
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |