பிரித்தானியாவை மொத்தமாக உலுக்கிய சம்பவம்... நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த இளவரசி கேட்
பிரித்தானியாவில் இந்த கோடையில் கத்திக்குத்து தாக்குதலில் கொல்லப்பட்ட மூன்று சிறுமிகளின் குடும்பத்தினரை இளவரசி கேட் மிடில்டன் முதல் முறையாக சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.
இளவரசி கேட் மிடில்டன்
புற்றுநோய் சிகிச்சையில் இருந்து வந்த வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன், பொதுவெளியில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை தவிர்த்து வந்தார். தற்போது அவர் சிகிச்சையை முடித்துக் கொண்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், சவுத்போர்ட் பகுதிக்கு திடீர் விஜயம் செய்த இளவரசர் வில்லியம் - கேட் தம்பதி, இந்த கோடையில் கத்திக்குத்து தாக்குதலால் இறந்த மூன்று சிறுமிகளின் குடும்பங்களை சந்தித்துள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பின்னர் கேட் மிடில்டன் சமூக சந்திப்புகளில் எதுவும் கலந்துகொள்ளவில்லை. ஆனால் தற்போது புற்றுநோய் உறுதி செய்யப்பட்ட பின்னர், அவரது கீமோதெரபி சிகிச்சை முடிவுக்கு வந்ததை அடுத்து அவர் முதன்முதலில் சவுத்போர்ட் பகுதிக்கு விஜயம் செய்துள்ளார்.
புதன்கிழமை வெளியான தகவலில், சவுத்போர்ட் பகுதிக்கு இளவரசர் வில்லியம் விஜயம் செய்ய உள்ளார் என்றும், பாதிக்கப்பட்ட சிறுமிகளின் குடும்பத்தினரை சந்திக்க இருக்கிறார் என்றும் குறிப்பிடப்பட்டது.
சவுத்போர்ட் பகுதிக்கு விஜயம்
ஆனால் வியாழக்கிழமை அவர் புறப்படும் முன்னர், கூடவே இளவரசி கேட் மிடில்டனும் சவுத்போர்ட் பகுதிக்கு விஜயம் செய்ய உள்ளார் என அறிவிப்பு வெளியானது.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்களையும் வில்லியம் - கேட் தம்பதி தனிப்பட்ட முறையில் சந்தித்துள்ளனர். ஜூலை மாதம் கோடைகால முகாம் ஒன்றில், முன்னெடுக்கப்பட்ட தாக்குதலில் மூன்று சிறுமிகள் கொல்லப்பட்டதுடன், வேறு 8 சிறார்கள் உட்பட 10 பேர்கள் காயங்களுடன் தப்பினர்.
தற்போது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தங்கள் ஆதரவை உறுதி செய்ய வேண்டும் என வில்லியம் - கேட் தம்பதி விரும்பியதாகவும், அதனாலையே, கேட் மிடில்டன் சிகிச்சை முடித்துக்கொண்டதும், முதல் வேலையாக அந்த சிறுமிகளின் குடும்பத்தினரை சந்திக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |