விளையாட்டு, பேஷனில் ஆர்வம் கொண்ட தாய்லாந்து இளவரசி! சொத்து மதிப்போ பல நூறு கோடிகளில்
உலகின் கோடீஸ்வர இளவரசிகளில் ஒருவரான சிரிவண்ணவாரியின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.367 கோடி. இவரை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
தாய்லாந்து இளவரசி
பெரும்பாலான நாடுகளில் மன்னராட்சி முறை இல்லாமல் இருந்தாலும், சில நாடுகளில் மன்னராட்சி முறை இருக்கிறது. அதில் தாய்லாந்து ஒன்று. தாய்லாந்து மன்னர் வஜ்ரலாங்கோர்னுக்கும் (Vajiralongkorn) அவரது முன்னாள் மனைவி சுஜாரினி விவச்சரவோங்சேக்கும் பிறந்தவர் சிரிவண்ணவாரி (Sirivannavari)).
இதில், மன்னரிடம் இருந்து சுஜாரினி விவச்சரவோங்சே விவாகரத்து பெற்ற பிறகு தனது மகள் சிரிவண்ணவாரியை அழைத்து இங்கிலாந்து சென்றார். ஆனால், மன்னர் தனது மகள் சிரிவண்ணவாரியை கடத்தி தாய்லாந்து திரும்பினார்.
அப்போது, அவரது தாத்தா மன்னர் பூமிாபல் அதுல்யதேஜின் கட்டளையால் 2005 -ம் ஆண்டு சிரிவண்ணவாரி, நாரிரத்னா ராஜகன்யா இளவரசி அந்தஸ்து பெற்றார்.
விளையாட்டு, பேஷனில் ஆர்வம்
இளவரசி என்பதால் சிரிவண்ணவாரி அரண்மனையில் இருக்காமல் விளையாட்டில் ஆர்வமுடன் இருந்தார். 2005 -ம் ஆண்டு பிலிப்பைன்ஸில் நடந்த தென்கிழக்கு ஆசிய விளையாட்டு போட்டியில் பேட்மிண்டனில் பங்கேற்று தங்கம் வென்றார். அதுமட்டுமல்லாமல், இவர் ஒரு குதிரையேற்ற வீராங்கனை ஆவார்.
இதற்காக, பிரான்சில் சர்வதேச மானிட்யூர் ஈக்விடேஷன், Le Cadre Noir de Saumur-ல் பயிற்சி பெற்றார். பின்னர், தென் கிழக்கு ஆசிய விளையாட்டுகளில் குதிரையேற்ற விளையாட்டு குழுவின் உறுப்பினராகவும் போட்டியிட்டார்.
அதுமட்டுமல்லாமல், பேஷனில் ஆர்வம் கொண்ட சிரிவண்ணவாரி, ஆடை வடிவமைப்பாளரான பியர் பால்மெய்னை உதவியுடன் தனது முதல் பேஷன் ஷோ பிரசன்ஸ் ஆஃப் தி பாஸ்ட்டை நடத்தினார். மேலும், சிரிவண்ணவாரி என்ற பேஷன் பிராண்டையும் நடத்துகிறார்.
வைரங்கள், மரகதங்கள் மற்றும் ரத்தினங்கள் சேகரிப்பில் ஆர்வம் கொண்ட சிரிவண்ணவாரியின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.367 கோடியாகும். மன்னர் வஜ்ரலாங்கோர்ன் சொத்து மதிப்பு சுமார் ரூ.2.49 லட்சம் கோடி முதல் ரூ.5.81 லட்சம் கோடி வரை இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |