கேட் மிடில்டன் தமது பிள்ளைகளுக்கு விதித்துள்ள கடுமையான ஒரு சட்டம்: மூவரும் மீறுவதில்லையாம்
வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் தமது பிள்ளைகள் மூவருக்கும் வீட்டுக்குள் கடுமையான ஒரு சட்டத்தை விதித்துள்ளாராம், அதை அவர்கள் மீறுவதில்லையாம் என அந்த குடும்பத்திற்கு நெருக்கமானவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஒரு கடுமையான விதி
கேட் மிடில்டனின் மூன்று பிள்ளைகளுக்கும் பொதுவாக ஒரு கடுமையான விதி அமுலில் இருக்கிறது. அது, அவர்கள் வீட்டுக்குள் இருக்கும் போது கத்தக் கூடாது என்பது தான். எவரேனும் இந்த விதியை மீறி ஒருவருக்கு ஒருவர் கத்துவதாக தகவல் அறிந்தால், அதற்கு தண்டனையும் அளிக்கப்படுமாம்.
@PA
கேட் மற்றும் வில்லியம் தம்பதி தங்கள் குழந்தைகளை ஒழுக்கத்துடன் வளர்க்கும் பொருட்டு வித்தியாசமான நுட்பத்தை தெரிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது சகோதரர்களிடையே எப்போதேனும் சத்தமிட்டு பேசும் சூழல் உருவானால், அதற்கு காரணமானவர்களை உடனடியாக அங்கிருந்து தனியாக அழைத்து சென்று, வில்லியம் அல்லது கேட் எவரேனும் ஒருவர், அமைதியாக பேசி புரிய வைப்பார்கள் என்றே கூறப்படுகிறது.
அதிகமாக ஊக்குவிப்பது இல்லை
அதன் பின்னர் அவர்கள் அப்படியான சூழலை உருவாக்குவதில்லை என்றே கேட் வெளிப்படுத்தியுள்ளார். மட்டுமின்றி, கேட் மிடில்டன் தமது பிள்ளைகளுக்கு அலைபேசி அல்லது அதுபோன்ற கருவிகளின் பயன்பாட்டை அதிகமாக ஊக்குவிப்பது இல்லையாம்.
@REX
தங்கள் பிள்ளைகளின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு, கைவினை, ஓவியம் போன்றவற்றில் ஈடுபட கவனம் செலுத்துவார்களாம்.
மட்டுமின்றி, அலைபேசி பயன்பாடு அல்லது தொலைக்காட்சி வேளைகளை கட்டுப்படுத்துவதில் கேட் மிக கடுமையாக நடந்துகொள்வாராம்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.