விபத்தில் சிக்கிய இளவரசி தொடர்பில் மீண்டும் ஒரு கவலையளிக்கும் செய்தி
பிரித்தானிய மன்னர் சார்லசின் தங்கையான இளவரசி ஆன், குதிரை ஒன்றினால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிவிட்டநிலையில் அவரிடம் நடந்த விடயம் குறித்து கேட்கப்பட்டுள்ளது.

திடீரென மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட இளவரசி
கடந்த மாதம், அதாவது, ஜூன் மாதம் 23ஆம் திகதி, மாலை, Gloucestershireஇலுள்ள Gatcombe Park எஸ்டேட்டுக்கு அவசர உதவிக்குழுவினர் அழைக்கப்பட்டனர்.
அங்கிருந்த இளவரசி ஆனுக்கு அவர்கள் முதலுதவி அளித்தபின், அவரை Southmead மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அவருக்கு என பிரச்சினை என பக்கிங்காம் அரண்மனை வட்டாரம் தெரிவிக்காத நிலையில், சம்பவ இடத்தில் குதிரைகள் நின்றதால், அவரை குதிரை மிதித்திருக்கலாம் அல்லது ஏதோ ஒரு வகையில் குதிரையால் அவர் காயமடைந்திருக்கலாம் என செய்திகள் வெளியாகின. ஐந்து நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் இளவரசி ஆன்.

மீண்டும் ஒரு கவலையளிக்கும் செய்தி
இந்நிலையில், மீண்டும் பணிக்குத் திரும்பிய இளவரசி ஆனிடம், நடந்த விபத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ஆனால், இளவரசிக்கோ, நடந்த விபத்து குறித்து எதுவுமே நினைவில்லை.
இளவரசி தலையில் தாக்கப்பட்டதால், அவருக்கு concussion என்னும் பிரச்சினை ஏற்பட்டது. இந்த concussion என்பது, மூளையின் செயல்பாடுகளை பாதிக்கும், மூளையில் ஏற்படும் லேசான காயமாகும். ஆகவே, ஞாபக மறதியாலும் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது நினைவிருக்கலாம்.
ஆக, இளவரசி ஆனுக்கு என்ன நடந்தது என்பது மர்மமாகவே நீடிப்பதாக ராஜ குடும்ப நிபுணரான Michael Cole என்பவர் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |