சுவிஸில் 8 ஆண்டுகள் இரவுநேரப்பணியில் தூங்கிய சிறை காவலர்: பின்னர் நடந்த பரபரப்பு சம்பவம்
சுவிட்சர்லாந்தில் சிறை காவலர் ஒருவர் 8 ஆண்டுகள் இரவுநேரப்பணியில் தூங்கியது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவரை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது சிறை நிர்வாகம்.
பணி நீக்க உத்தரவை ஏற்க மறுத்த அந்த காவலர் நீதிமன்றத்தை நாட, தற்போது பெடரல் நீதிமன்றமும் பணி நீக்கத்தை உறுதி செய்துள்ளது.
வலைஸ் பகுதியில் அமைந்துள்ள Crêtelongue சிறையிலேயே தொடர்புடைய சம்பவம் நடந்துள்ளது. இரவுநேரப்பணியில் பொறுப்பற்று தூங்கிய காவலரும் அவரது சக ஊழியரும் மூன்று துறை சார்ந்த அதிகாரிகளால் திடீர் ஆய்வுக்கு உள்ளான நிலையில், இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதனையடுத்து முன்னெச்சரிக்கை ஏதும் இன்றி தொடர்புடைய இருவர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. மட்டுமின்றி இந்த இரு காவலர்கள் மீதும் 2018ல் மட்டுமே சிறை நிர்வாகத்திற்கு சந்தேகம் எழுந்துள்ளது.
ஆனால் விசாரணையில் இவர்கள் இருவரும் 2010ல் இருந்தே தூங்குவது கண்டறியப்பட்டது. இந்த நிலையில் பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து, தண்டிக்கப்பட்ட காவலர் நீதிமன்றத்தை நாடியும் பலனில்லாமல் போயுள்ளது.