பிரான்சை உலுக்கிய சிறை வாகனத் தாக்குதல்... தப்பிய குற்றவாளியின் பகீர் பின்னணி
பிரான்சில் சிறை வானத்தை மறித்து தாக்கிவிட்டு, குற்றவாளியை மீட்டுச் சென்ற விவகாரத்தில் அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது.
ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூடு
பிரான்சில் ஆயுததாரிகளால் சிறை வாகனம் தாக்குதலுக்கு இலக்கான சம்பவத்தில் Mohamed Amra என்ற முக்கிய குற்றவாளி ஒருவர் தப்பியுள்ளார்.
இந்த சம்பவத்தில் சிறை அதிகாரிகள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். சிலர் காயங்களுடன் தப்பியுள்ளனர். தற்போது குற்றவாளி Mohamed Amra தொடர்பில் அதிரவைக்கும் பின்னணித் தகவலக்ள் வெளியாகியுள்ளன.
குறித்த நபருக்கு போதைப் பொருள் கடத்தல் குழுவினருடன் தொடர்பு இருப்பதாகவும், அவர்களே தாக்குதல் முன்னெடுத்து அவரை மீட்டு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
செவ்வாயன்று பாரிஸுக்கு அருகிலுள்ள ரூவன் நகரில் உள்ள சிறைக்கு அம்ரா நீதிமன்றத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டார். இந்த நிலையிலேயே சிறை வாகனத்தை மறித்த கார் ஒன்றில் இருந்து ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
30 வயதான அம்ரா மே 10 அன்று திருட்டு சம்பவம் தொடர்பில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டார். மட்டுமின்றி, அம்ரா கண்காணிக்கப்படும் குற்றவாளிகள் பட்டியலிலும் இடம்பெறவில்லை.
இதுவரை 13 முறை குற்றவாளி
அதனால், அவருடன் 5 அதிகாரிகள் பாதுகாப்புக்கு சென்றுள்ளனர். வார இறுதியிலும் அம்ரா சிறையில் இருந்து தப்ப முயன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடந்த சம்பவம் தொடர்பில் அவரது சட்டத்தரணியும் சொந்த தாயாரும் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
சிறையில் இருந்து தப்ப இருப்பதாக தம்மிடம் அம்ரா குறிப்பிடவில்லை என்றே அவரது தாயார் தெரிவித்துள்ளார். சொந்த மகனாக இருந்தாலும், எதைக் குறித்தும் தம்மிடம் அம்ரா பகிர்ந்துகொண்டதில்லை என்றே அவர் தெரிவித்துள்ளார்.
பலமுறை பல சிறைகளில் சென்று தமது மகனை சந்தித்துள்ளதாக கூறும் அவர், தம்மிடம் எதையும் அம்ரா பகிர்ந்துகொண்டதில்லை என தெரிவித்துள்ளார். பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு இதுவரை 13 முறை குற்றவாளி என நீதிமன்றங்களால் தீர்ப்பளிக்கப்பட்டவர் அம்ரா.
தற்போது ஆட்கடத்தல், கொலை உள்ளிட்ட வழக்குகளில் அம்ரா உட்படுத்தப்பட்டுள்ளார். இரண்டாவது நாளாக பொலிசார் அம்ராவை தீவிரமாக தேடி வருகின்றனர். அவரை போதை மருந்து கடத்தல் குழுவினர் மீட்டு சென்றிருக்கலாம் என்றே நம்பப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |