பிரித்தானியாவில் கொடூர கைதியுடன் உறவு கொண்ட பெண் சிறை ஊழியர் கைது!
பிரித்தானியாவில் பெண்ணை வன்புணர்வு செய்து, கொடூரமாக கொலை செய்ததால் சிறையில் இருக்கும் கைதியுடன், பெண் சிறை ஊழியர் ஒருவர் உறவில் இருந்தது உறுதியானதால் கைது செய்யப்பட்டார்.
கொடூர குற்றவாளி
கடந்த 2021ஆம் ஆண்டில் பிரித்தானிய பெண் ஆல்பிரட் ஜாரா அலினா (35) என்ற பெண்ணை வன்புணர்வு செய்து, கொடூரமாக கொலை செய்த ஜோர்டான் மெக்ஸ்வீனி (29) என்ற நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து அவருக்கு 38 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், எந்தவொரு பெண்ணுக்கும் ஆபத்தான நபர் என ஜோர்டான் குறிப்பிடப்பட்டார்.
(ஜாரா அலினா)
Image: PA
தென் கிழக்கு லண்டனில் உள்ள சிறையில் ஜோர்டான் அடைக்கப்பட்டுள்ளார். 32 வயது பெண் சிறை ஊழியர் ஒருவர் கைதியான ஜோர்டானை முத்தமிட்ட குற்றச்சாட்டில் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
அத்துடன் அவர் ஜோர்டானுடன் நெருக்கமாக இருந்துள்ளார் என்று கூறப்பட்டது. ஆனால் அதனை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் இல்லை.
Image: PA
பெண் சிறை ஊழியர் கைது
இந்த நிலையில், குறித்த பெண் ஊழியர் கைதியுடன் உறவில் இருந்த புகைப்படங்கள் சிக்கியதால் அவர் கைது செய்யப்பட்டார். அவர் யார் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. சிறை போன்ற முக்கியமான இடத்தில் தவறான நடத்தை போன்ற பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீதித்துறை அமைச்சக ஆதாரம் இந்த விடயம் தொடர்பில் கூறுகையில், 'கைதிகளுடன் தகாத உறவுகளை பொறுத்துக்கொள்ள முடியாது, குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் தாங்களாகவே சிறையில் இருக்க வேண்டும்' என தெரிவித்துள்ளது.
Image: PA
இதற்கிடையில், நேரடி பொலிஸ் விசாரணையில் கருத்து தெரிவிப்பது பொருத்தமற்றது என சிறைத்துறை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.