குடிப்பதற்கு தண்ணீர் கேட்ட கைதி.., ஆசிட் குடிக்க வைத்த பொலிஸாரின் கொடூர செயல்
குடிப்பதற்கு தண்ணீர் கேட்ட கைதியை ஆசிட் குடிக்க வைத்த பொலிஸாரின் கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஆசிட் குடிக்க வைத்த பொலிஸார்
இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், அம்ரோஹா மாவட்டத்தில் தடுப்புக் காவலில் தர்மேந்திர சிங் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த இளைஞர் குடிப்பதற்கு தண்ணீர் வேண்டும் என்று பொலிஸாரிடம் கேட்டுள்ளார். ஆனால், தண்ணீருக்கு பதிலாக ஆசிட் குடிக்க வைத்ததால் ஆபத்தான நிலையில் இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தர்மேந்திரா சிங்கின் சகோதரர் கூறுகையில், "ஒக்டோபர் 14 -ம் திகதி அன்று இரண்டு தரப்பினர் சண்டையிட்டு கொண்டிருந்தனர். அப்போது அதனை தடுக்க சென்ற தர்மேந்திர சிங்கை பொலிஸார் கைது செய்தனர்.
பின்னர், காவலில் இருந்த எனது சகோதரர் தர்மேந்திர சிங் தண்ணீர் கேட்டபோது, போதையில் இருந்த பொலிஸார் அவரை ஆசிட் குடிக்க வைத்துள்ளனர்.
இதனால், எனது சகோதரர் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. ஆசிட் குடிக்க வைப்பதற்கு முன்பாக தர்மேந்திர சிங்கை பொலிஸார் கடுமையாக தாக்கியுள்ளனர்" என்றார்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட காலவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இளைஞர்களின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |