பிரித்தானிய கொலையாளிகள் சிறையில் அடைக்கப்பட்ட கைதி..தவறாக மருத்துவமனைக்கு விடுவிக்கப்பட்டதால் பரபரப்பு
பிரித்தானியாவின் Buckinghamshire சிறையில் அடைக்கப்பட்ட கைதி ஒருவர், தவறான ஆவண பிழையால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கிரெண்டான் சிறை
Buckinghamshire உள்ள HMP கிரெண்டான் சிறையில் கொலையாளிகள் மற்றும் பலாத்காரம் செய்தவர்கள் என 180 ஆண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் பலர் கொலை, பலாத்காரம் மற்றும் தீ வைப்பு உள்ளிட்ட குற்றங்களுக்காக B வகை சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில், சிறை அறை ஒன்றில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரை சிறைக்காவலர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
Wikipedia
குழம்பிய கைதி
தன்னை ஏன் மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்கள் என குறித்த கைதி குழம்பியுள்ளார். இதனை அதிகாரிகள் அறிந்ததைத் தொடர்ந்து சிவப்புக் கொடி உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் ஒரு சிறையில் இருந்த கைதிகளின் பெயர்கள் ஒரே மாதிரியாக இருந்ததால் இந்த தவறு ஏற்பட்டுள்ளதாக பின்னர் தெரிய வந்தது.
இதுபோன்ற சம்பவம் நடப்பது இது முதல் முறை அல்ல. 2019ஆம் ஆண்டில் கைதி ஒருவர் தவறாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அறிக்கை விளக்கம்
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் 2019ஆம் ஆண்டில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்திருப்பதாகவும், அது மீண்டும் நடந்திருப்பது கவலைக்குரியது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சிறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இந்த சம்பவம் வெளிப்படையாக பெருமைப்பட வேண்டிய ஒன்று அல்ல, ஆனால் அது சரியான நேரத்தில் பிடிபட்டது மற்றும் சிறை என்ன செய்ய முயற்சிக்கிறது என்பதை குறைக்கக்கூடாது' என தெரிவித்துள்ளார்.