போராட்டகாரர்கள் காவல்துறையினரிடையே பயங்கர மோதல்: வன்முறை களமாக மாறிய சுவிஸின் முக்கிய நகரம்
சுவிட்சர்லாந்தில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸின் St. Gallen நகரிலே இந்த மோதல் வெடித்துள்ளது. போராட்டகாரர்களுக்கும் பொலிசாருக்கும் இடையே வெள்ளிக்கிழமை மாலை முதல் மோதல்கள் தொடங்கியது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினரை மீது போத்தல்கள், கற்கள், பட்டாசுகள் மற்றும் பெட்ரோல் குண்டு வீசி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
தற்காப்புக்காக காவல்துறையினர் ரப்பர் புல்லட் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். போராட்டகாரர்கள் வன்முறைில் ஈடுபட்டதால் அப்பகுதியில் கடைகள் மற்றும் வீடுகளில் என பல்வேறு சேதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, காவல்துறையினர் கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசி போராட்டகாரர்கள் கலைக்க முயன்றுள்ளனர்.
இந்த மோதலில் இருவர் காயமடைந்ததாகவும், 19 போராட்டகாரர்கள் தடுத்து வைக்கப்பட்டதாகவும், விசாரணைக்கு பின் அவர்கள் விடுவிக்கப்பட்டதாக பொலிசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
— Anonyme Citoyen (images) (@AnonymecitoyenS) April 3, 2021
சனிக்கிழமை, 25 வயதான சுவிஸ் குடிமகன் காவலில் வைக்கப்பட்டார். காவல்துறையின் நடவடிக்கைகள் நியாயமானது என்று St. Gallen மேயர் Maria Pappa குறிப்பிட்டுள்ளார்.
கொரோனாவின் போது இளைஞர்கள் செய்த பல பிரச்சினைகளுக்கு பொலிசாரை குறை சொல்ல முடியாது என St. Gallen மேயர் Maria Pappa கூறினார்.