9 சிக்ஸர், 13 பவுண்டரிகள்! 61 பந்தில் 134 ஓட்டங்கள்.. வாணவேடிக்கை காட்டிய வீரர்
டி20 போட்டிகளில் பிரித்வி ஷாவிற்கு இது முதல் சதம் ஆகும்
22 வயதாகும் பிரித்வி ஷா 63 போட்டிகளில் 1588 ஓட்டங்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
சையத் முஸ்தாக் அலி தொடரில் மும்பை அணியின் கேப்டன் பிரித்வி ஷா அதிரடியாக சதம் விளாசி மிரட்டினார்.
ராஜ்கோட்டில் மும்பை மற்றும் அசாம் அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி நடந்தது. முதலில் துடுப்பாடிய மும்பை அணி கேப்டன் பிரித்வி ஷாவின் அதிரடியால் 230 ஓட்டங்கள் குவித்தது.
சிக்ஸர்களை பறக்கவிட்டு வாணவேடிக்கை காட்டிய பிரித்வி ஷா, 61 பந்துகளில் 134 ஓட்டங்கள் விளாசினார். 19 பந்துகளில் அரைசதம் அடித்த அவர், 46 பந்துகளில் சதத்தினை எட்டினார்.
Maiden hundred for Captain Prithvi Shaw in T20 format, hundred from 46 balls including 10 fours and 6 sixes, A knock to remember, What a player. pic.twitter.com/bokhoHDAPQ
— Johns. (@CricCrazyJohns) October 14, 2022
அவரது சதத்தில் 9 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகள் அடங்கும். மும்பை அணியில் ஜெய்ஸ்வால் 30 பந்துகளில் 42 ஓட்டங்கள் விளாசினார். ரியான் பராக் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
பின்னர் ஆடிய அசாம் அணி 169 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக ராஜ்ஜாகுட்டின் அகமது 39 ஓட்டங்கள் எடுத்தார். மும்பை அணியின் தரப்பில் துஷார் தீஷ்பாண்டே 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.