முதல் ஓவர் முதல் பந்திலே ப்ரித்வி ஷாவை அவுட்டாக்கிய இலங்கை வீரர்! ஆக்ரோசமாக கத்திய வீடியோ காட்சி
இலங்கை அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில், ப்ரித்வி ஷா டக் அவு ஆகி வெளியேறும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி நேற்று கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ஓட்டங்கள் எடுத்தது.
அதன் பின் ஆடிய இலங்கை அணி 18.3 ஓவரில் 126 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில், இப்போட்டியின் முதல் ஓவரின் முதல் பந்தை, இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தஷ்மன்ந்த சமீரா வீசினார். அப்போது இந்திய அணியின் துவக்க வீரரான ப்ரித்வி ஷா அந்த பந்தை தடுத்து ஆட, முற்பட ஆனால் பந்தானது அவரது பேட்டில் பட்டு, கீப்பரிடம் சென்றது.
SHAW OUT FOR A GOLDEN DUCK ON DEBUT ?
— Sony Sports (@SonySportsIndia) July 25, 2021
Dream start for Sri Lanka! ?
Tune into Sony Six (ENG), Sony Ten 1 (ENG), Sony Ten 3 (HIN), Sony Ten 4 (TAM, TEL) & SonyLIV (https://t.co/QYC4z57UgI) now! ?#SLvINDOnlyOnSonyTen #HungerToWin #PrithviShaw pic.twitter.com/zicSo0ZPtU
ஒருநாள் போட்டிகளில் ப்ரித்வி ஷா, இலங்கை அணியின் பந்து வீச்சை துவக்க வெளுத்து வாங்கினார். இதனால் அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர் டக் அவுட் ஆகி ரசிகர்களை ஏமாற்றினார்.
அதுமட்டுமின்றி வேகப்பந்து வீச்சாளர் தஷ்மன்ந்த சமீரா அவரை அவுட்டாக்கியவுடன் கடும் ஆக்ரோசத்தை வெளிப்படுத்தினார். இந்த போட்டி ப்ரித்வி ஷாவுக்கு முதல் சர்வதேச டி20 போட்டி என்பது நினைவுகூரத்தக்கது.