153 பந்துகளில் 244 ஓட்டங்கள்! ஏன் அணியில் இருந்து நீக்கப்பட்டேன் என தெரியவில்லை..இளம் வீரர் குமுறல்
இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஏன் நீக்கப்பட்டேன் என்று தெரியவில்லை என்று பிரித்வி ஷா வேதனை தெரிவித்துள்ளார்.
மிரட்டல் ஆட்டம்
23 வயது இளம் இந்திய அணி வீரர் பிரித்வி ஷா கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார்.
இங்கிலாந்து டொமெஸ்டிக் ஒருநாள் தொடரில் நார்த்தம்ப்டன்ஷிர் அணிக்காக களமிறங்கிய ஷா, சோமர்செட் அணிக்கு எதிரான போட்டியில் ருத்ர தாண்டவம் ஆடினார்.
சிக்ஸர்களை பறக்கவிட்ட அவர் 153 பந்துகளில் 244 ஓட்டங்கள் குவித்தார். இதில் 11 சிக்ஸர்கள், 28 பவுண்டரிகள் அடங்கும்.
பிரித்வி ஷா வேதனை
இந்நிலையில் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து பிரித்வி ஷா வேதனை தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், ' இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டபோது ஏன் நீக்கப்பட்டேன் என்ற காரணம் கூட எனக்கு தெரியவில்லை. ஆனால் சிலர் எனது பிட்னஸ்தான் கரணம் என்று கூறினர். எனினும், தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள அனைத்து பிட்னஸ் தேர்விலும் வெற்றி பெற்றிருக்கிறேன்.
அதன் பின்னரும் உள்ளூர் தொடரில் சிறப்பாக விளையாடி, இந்திய அணியில் இடம்பிடித்தேன். ஆனால் IPL தொடருக்கு பின் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அது எனக்கு ஏமாற்றமாக இருந்தது. இருப்பினும் அடுத்த இலக்கை நோக்கி நகர்ந்து வருகிறேன்.
இதற்காக யாருடனும் சண்டை போட முடியாது. இந்திய அணிக்காக 12 முதல் 14 ஆண்டுகளாவது விளையாட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே என் கனவு' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |