பெண்கள் பாதுகாப்புக்கான புதிய சட்டத்தை நிராகரித்த போரிஸ் ஜான்சன்! கடும் கோபத்தை வெளிப்படுத்திய பிரீத்தி பட்டேல்
பிரித்தானியாவில் பொது இடங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான துன்புறுத்தல்களுக்கு எதிராக புதிய பாதுகாப்பு சட்டத்தை அறிமுகப்படுத்தும் முயற்சிகளை பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்தவாரம் புறக்கணித்தார். இதனால் பிரித்தானிய உள்துறை செயலாளர் ப்ரீத்தி பட்டேல் கோபமடைந்துள்ளார்.
பெண்கள் மற்றும் சிறுமிகளை ஆக்ரோஷமாக குறிவைக்கப்படும் இந்த பிரச்சனையை வெறும் "ஓநாய் ஊளையிடும்" விடயம் போல் பிரதமர் கருதுகிறார் என்ற உள்துறை அலுவலகத்தில் இது மேலும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக ப்ரீத்தி பட்டேல் கூறியுள்ளார்.
இதனால் போரிஸ் ஜான்சனுக்கும் ப்ரீத்தி படேலுக்கும் இடையே பதற்றங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில், தெருக்களிலும் மதுக்கடைகளிலும் அல்லது இசை நிகழ்ச்சிகளின் போது பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளன.
இதன்காரணமாக தற்போது, பிரித்தானியாவின் உள்துறை அலுவலக அதிகாரிகள் பொது இடங்களில் நடைபெறும் பாலியல் துன்புறுத்தலை ஒரு குற்றமாக மாற்றக்கூடிய சட்டரீதியான மதிப்பாய்வை நடத்தி வருகின்றனர்.
பொது இடங்களில் பெண்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும் அனைத்து வகையான நடத்தைகளும் இதில் அடங்கும்.
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளைக் கையாள்வது குறித்து படேலின் ஆலோசனை, 180,000 பங்களிப்பாளர்களிடமிருந்து கருத்துக்களைப் பெற்றதால், பிரதமர் பொதுமக்களின் மனநிலையை முற்றிலும் தவறாக மதிப்பிட்டார் என்ற கருத்துக்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், பாலியல் குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதில் படேல் உறுதியாக இருக்கிறார் மற்றும் பிரித்தானியாவை பெண்களுக்கு பாதுகாப்பான இடமாக மாற்ற விரும்புகிறார்.