மன்னர் சார்லசிடம் மன்னிப்புக் கேட்கும் பிரீத்தி பட்டேல்: சர்ச்சைப் பின்னணி
சர்ச்சைக்குரிய இளவரசர் ஆண்ட்ரூவுக்கு ஆதரவாக மன்னருடைய முதன்மை தனிச்செயலருக்கு மின்னஞ்சல் அனுப்பிய விடயம் வெளியில் வந்ததற்காக முன்னாள் உள்துறைச் செயலரான பிரீத்தி பட்டேல் மன்னரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார்.
சர்ச்சையில் சிக்கிய இளவரசர் ஆண்ட்ரூ
ஏராளம் இளம்பெண்கள் மற்றும் சிறுமிகளின் வாழ்வை சீரழித்த அமெரிக்க கோடீஸ்வரரான ஜெப்ரி எப்ஸ்டீனுடன் தொர்டபிலிருந்த பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ, பருவம் எய்தாத பெண் ஒருவருடன் உடல் ரீதியாக உறவு வைத்துக்கொண்டதற்காக அவரது ராஜ குடும்ப பொறுப்புக்கள் பறிக்கப்பட்டன.
The Mirror
மக்களுடைய வரிப்பணத்திலிருந்து செலவு செய்து, இளவரசர் ஆண்ட்ரூவுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டது.
ஆண்ட்ரூவுக்கு ஆதரவாக செயல்பட்ட பிரீத்தி பட்டேல்
இந்நிலையில், இளவரசர் ஆண்ட்ரூவுக்கு மீண்டும் பாதுகாப்பை அளிப்பதற்கு ஆதரவு தெரிவித்து, அந்த விடயத்தை மீளாய்வு செய்யக்கோரி பரிந்துரை செய்து, மன்னருடைய முதன்மை தனிச்செயலருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார் முன்னாள் உள்துறைச் செயலரான பிரீத்தி பட்டேல்.
ஆனால், அந்த விடயத்தில் எந்த மாற்றமும் செய்யும் அதிகாரம் மன்னருடைய முதன்மை தனிச்செயலருக்கு கிடையாது.
இதற்கிடையில், இளவரசர் ஆண்ட்ரூவுக்கு ஆதரவாக மன்னருடைய முதன்மை தனிச்செயலருக்கு பிரீத்தி பட்டேல் மின்னஞ்சல் அனுப்பிய விடயம் வெளியில் லீக்காகிவிட்டது. அந்த விடயம் வெளியில் வந்ததற்காக முன்னாள் உள்துறைச் செயலரான பிரீத்தி பட்டேல் மன்னரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த விடயம் வெளியில் வந்ததால் மன்னருக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்காகவும், கஷ்டங்களுக்காகவும் நான் மன்னரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் அவர்.
இளவரசர் ஆண்ட்ரூவின் பாதுகாப்புக்காக மக்கள் பணத்திலிருந்து கொடுக்கப்பட்ட தொகை, ஆண்டுக்கு 3 மில்லியன் பவுண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |