புகலிடக்கோரிக்கையாளர்களை கொடூரமாக நடத்தியவர்: ராஜினாமா செய்த இந்திய வம்சாவளியினர் மீது கடும் விமர்சனங்கள்
பிரித்தானிய வரலாற்றிலேயே மோசமான உள்துறைச் செயலர் என்ற பெயரைப் பெற்றுள்ளார் பிரீத்தி பட்டேல்.
பிரீத்தி பதவி விலகியதும், அவரை மோசமாக விமர்சித்துள்ளார்கள் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
பிரித்தானிய பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து பதவி விலகியதால், அவரது இடத்தில் லிஸ் ட்ரஸ்ஸை பிரதமராகத் தேர்வு செய்தார்கள், அவர் சார்ந்த கன்சர்வேட்டிவ் கட்சியினர்.
லிஸ் ட்ரஸ் பிரதமராக தேர்வு செய்யப்பட்ட சிறிது நேரத்தில் தான் ராஜினாமா செய்வதாக அறிவித்தார், உள்துறைச்செயலராக பொறுப்பு வகித்த பிரீத்தி பட்டேல்.
இந்நிலையில், அவர் பதவி விலகியதுமே, அவரை மோசமாக விமர்சித்துள்ளார்கள் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலானோர்.
புலம்பெயர்தல், குற்றம், தொண்டு நிறுவனம் மற்றும் பிற கொள்கைகள் குறித்து பெரிதாக வாக்குறுதிகள் அளித்துவிட்டு குறைவாகவே செயலில் இறங்கியவர் என விமர்சிக்கப்படும் பிரீத்தி ராஜினாமா செய்தது நல்லது. அவர்தான் பிரித்தானிய வரலாற்றிலேயே மோசமான உள்துறைச் செயலர் என பிரீத்தி பட்டேல் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
Credit: AFP Photo
சமூக ஊடகங்களில் பலர் பிரீத்தி பட்டேலை கடுமையாக விமர்சித்துவரும் நிலையில், லிவர்பூல் வேவர்ட்ரீ நாடாளுமன்ற உறுப்பினரான Paula Barker, பிரீத்தி மற்றவர்களை வம்பிழுப்பவர் என்றும், அவரால் பிரித்தானியாவுக்கு அவமானம் ஏற்பட்டது என்றும் கூறியுள்ளதுடன், அவருக்குப் பின் வருபவரோ அதை விட மோசம் என்பதுதான் கவலையாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.
லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Zarah Sultana என்பவரோ, பிரீத்தி பட்டேல் ஒழிந்தது நல்லது, நீங்கள் கொடூரமானவர், நீங்கள் போனது யாருக்கும் கவலையாக இருக்காது என்று கூறியுள்ளார்.
Priti Patel will go down as the worst Home Secretary in history.
— Paula Barker MP (@PaulaBarkerMP) September 5, 2022
Her tenure has been plagued by allegations of bullying and spiteful policies which have made our country a pariah on the fringes of international law.
Sadly, I expect more of the same from her successor. https://t.co/fk5GudrGLJ
Stewart McDonald என்னும் நாடாளுமன்ற உறுப்பினர், பிரீத்தி பட்டேல் தன் பதவிக்காலத்தில் புகலிடக்கோரிக்கையாளர்களை மிகக்கொடூரமாக நடத்தியவர், மோசமான துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் அளவுக்கு தவறாக நிர்வாகம் செய்தவர் என்ற பெயரை அவர் விட்டுச் செல்கிறார் என்று கூறியுள்ளார்.
பிரீத்தியின் உள்துறை அலுவலகத்தில் பணியாற்றியவரான Lucy Moreton என்பவர், அலுவலகத்தில் ஊழியர்கள் அனுபவித்த மன மற்றும் உடல் ரீதியான பாதிப்புகள் மிக பயங்கரம், அனைத்து மட்டத்திலுமுள்ள ஊழியர்களின் குறைகள் செவிசாய்க்கப்படவில்லை, சொல்லப்போனால் பிரச்சினைகளைச் சொல்லியவர்கள் தண்டிக்கப்பட்டார்கள் என்கிறார்.
உள்துறை அலுவலகத்துக்காக பணியாற்றிய ஊடகவியலாளரான Nicola Kelly என்பவரோ, பிரீத்தி பட்டேலின் அலுவலகத்தில் பணியாற்றுவது எவ்வளவு கடினம் என்பது எப்போதும் நினைவிலிருக்கும் என்கிறார்.
Good riddance @PritiPatel.
— Zarah Sultana MP (@zarahsultana) September 5, 2022
You were an unspeakably cruel Home Secretary and won’t be missed by anyone with a shred of decency ??