ஆபத்தான முறையில் சாலையில் சாகசம் காட்டிய தனியார் பேருந்து.., பதற வைக்கும் வீடியோ
பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையில் தனியார் பேருந்து செல்லும் வீடியோ வெளியாகி காண்போரை பதறவைத்துள்ளது.
வீடியோ வெளியீடு
சமீப காலமாக தனியார் பேருந்துகளின் ஓட்டுநர்கள் குறித்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. ஏனென்றால் சாலைகளில் தனியார் பேருந்துகளை வேகமாக இயக்கும் போது பொதுமக்களுக்கு பயத்தை உண்டாக்குகிறது.
இதனால் விபத்துகள் ஏற்பட்டு பலரும் உயிரிழக்க வேண்டிய நிலை உண்டாவது மட்டுமல்லாமல் சாலையில் செல்லும் பிற வாகன ஓட்டிகளுக்கும் வாகனங்களை இயக்குவதற்கு அச்சம் நிலவுகிறது.
மேலும், பேருந்துக்குள் இருக்கும் பயணிகளும் பயத்திலேயே இருக்கின்றனர். சில நேரங்களில் பேருந்தின் கதவுகள் திறந்திருப்பதால் வளைவுகளில் செல்லும் போது பலரும் கீழே விழுந்து ஆபத்தை சந்திக்கின்றனர்.
அந்த மாதிரியான ஒரு சம்பவம் தான் இலங்கையில் நடைபெற்றுள்ளது. அங்குள்ள சாலையில் செல்லும் தனியார் பேருந்து ஒன்று சாகசம் செய்வது போல செல்லும் வீடியோ வெளியாகி காண்போரை பதறவைத்துள்ளது.
பயணிகளுக்கு ஆபத்தான முறையில் பயணத்தை வழங்கிய இந்த தனியார் பேருந்து குறித்து நெட்டிசன்கள் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |