ஊழியர்களுக்கு கார் மற்றும் பைக்கை பரிசாக வழங்கிய சென்னை தனியார் நிறுவனம்
சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு கார் மற்றும் பைக்கை சென்னை தனியார் நிறுவனம் பரிசாக வழங்கியுள்ளது.
ஊழியர்களுக்கு பரிசு
உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை ஊக்கப்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றனர்.
அந்தவகையில், சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று தன்னுடைய ஊழியர்களுக்கு கார் மற்றும் பைக்கை பரிசாக வழங்கியுள்ளது.
சர்மவுண்ட் என்ற தனியார் லாஜிஸ்டிக் நிறுவனம் கடந்த 2022 -ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 2 ஆண்டுகள் ஆன நிலையிலும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், பிரம்மாண்டமான நிகழ்ச்சி ஒன்றை நடத்தி ஊழியர்களுக்கு பரிசுகள் வழங்கியுள்ளார்.
அதாவது நிகழ்ச்சியில் 14 ஊழியர்களுக்கு ஸ்கூட்டியும், இருவருக்கு ராயல் என்ஃபீல்டு 350 புல்லட்டும், ஒரு ஊழியருக்கு காரும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.மொத்தமாக ரூ.25 லட்சம் மதிப்பில் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராயன் பேசுகையில், "கடந்த 2022 -ம் ஆண்டில் நிறுவனத்தை தொடங்கினேன். இரண்டு ஆண்டுகள் தான் ஆனாலும் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு பரிசுகள் வழங்கியுள்ளோம்.
நான் இந்த நிறுவனத்தை தொடங்குவதற்கு முன்பு 19 ஆண்டுகள் வேறொரு நிறுவனத்தில் பணிபுரிந்தேன். அப்போது எனக்கு எதிர்பார்ப்புகள் இருந்தது. ஆனால், அது நிறைவேறவில்லை.
எனது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் எதிர்பார்ப்பும் நிறைவேற வேண்டும் என்பதற்காக பரிசுகள் கொடுத்துள்ளோம்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |