தொலைந்து போன போனில் உள்ள டேட்டாகளை அழிப்பது எப்படி தெரியுமா ?
smart phone
By Kishanthini
பொதுவாக ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் போன்ற சாதனங்களை தொலைத்து விட்டால் அதில் உள்ள டேட்டாகளை வேறு யாரும் பயன்படுத்தாதபடி உங்கள் சாதனத்தில் உள்ள விபரங்களை அழிக்க முடியும். தற்போது அவை எப்படி என பார்ப்போம்.
செயல்முறை
- முதலில் android.com/find என்ற தளத்திற்கு செல்ல வேண்டும்.
- உங்களது கூகுள் அக்கவுன்ட்டை லாக்-இன் செய்யுங்கள்.
- இங்கு நீங்கள் பயன்படுத்திய மற்றும் பயன்படுத்திக்கொண்டிருக்கும் சாதனங்களின் பட்டியலை பார்க்க முடியும். ஒருவேலை ஒன்றுக்கும் மேற்பட்ட சாதனத்தை பயன்படுத்தியிருந்தால், திரையின் மேல் காணப்படும் சாதனத்தை கிளிக் செய்ய வேண்டும். இனி, சாதனம் எங்கிருக்கிறது என்பதை பார்க்க முடியும்.
- உங்களது சாதனத்தை இங்கு பார்க்க முடியாமல் போனால், இறுதியாக சாதனம் இருந்த இடம் காண்பிக்கப்படும். திரையில் Sound, Lock and Erase என்ற இரண்டு ஆப்ஷன்கள் கொடுக்கப்படும்.
- இதில் Sound ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்களது சாதனம் இருந்த இடத்திலேயே சத்தத்தை ஐந்து நிமிடங்களுக்கு எழுப்பும். சாதனம் சைலன்ட் மோடில் வைக்கப்பட்டிருந்தாலும் இந்த அம்சம் கச்சிதமாக வேலை செய்யும்.
- ஒருவேலை Lock ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்களது சாதனம் லாக் செய்யப்பட்டு விடும். இறுதியாக Erase ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்களது சாதனத்தில் உள்ள அனைத்து தரவுகளும் அழிக்கப்பட்டு விடும்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US