தீபாவளி பரிசாக ஊழியர்களுக்கு Tata கார்களை வழங்கிய தனியார் நிறுவனம்
தனியார் மருந்து நிறுவனமானது தீபாவளியை முன்னிட்டு 15 ஊழியர்களுக்கு கார்களை பரிசாக வழங்கி சிறப்பித்துள்ளது.
தீபாவளி பரிசு
இந்திய மாநிலமான ஹரியானா, பஞ்ச்குலா தொழிற்பேட்டையில் அமைந்துள்ள மிட்ஸ்கைண்ட் ஹெல்த்கேர் (Mitskind Healthcare) என்ற தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தில் பணிபுரியும் சிறந்த செயல்திறன் கொண்ட 15 ஊழியர்களுக்கு 13 டாடா பஞ்ச் வாகனங்கள் மற்றும் 2 மாருதி கிராண்ட் விட்டாரா மொடல்களை தீபாவளி பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் உரிமையாளர் எம்.கே.பாட்டியா, கார் சாவியை ஊழியர்களுக்கு வழங்கி கௌரவித்தார்.
பின்னர் அவர் பேசுகையில், "எனது ஊழியர்கள் எனக்கு பிரபலங்களைப் போன்றவர்கள். எங்களுடைய நிறுவனத்தின் வெற்றிக்கு அவர்களின் பங்களிப்பு முக்கியமானவை. தீபாவளி பரிசை திட்டமிடப்படவில்லை" என்றார்.
அதேபோல, பரிசுகளை வாங்கிய ஊழியர்களும் நன்றி தெரிவித்தனர். அந்தவகையில் நிறுவனத்தின் மூத்த அதிகாரியான வீனஸ் என்பவர் கூறுகையில், "மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, நான் பணியில் சேர்ந்தபோது, எனது பணியாளர்கள் அனைவருக்கும் கார் வழங்க வேண்டும் என்ற கனவு நிறைவேறியுள்ளது" என்றார்.
கடந்த ஆண்டில் 12 ஊழியர்களுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. அதன்படி, இந்த நிறுவனத்தில் மொத்தம் 27 கார்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
2021 இல் அறிமுகப்படுத்தப்பட்ட டாடா பன்ச் ஆரம்ப விலை ரூ. 6 லட்சம் மற்றும் 1.2 லிட்டர் எஞ்சினுடன் பொருத்தப்பட்டுள்ளது. 5 நட்சத்திர G-NCAP மதிப்பீட்டைப் பெற்றுள்ள இந்த கார், அதன் பாதுகாப்பிற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |