அம்பானி வீட்டு திருமணத்தில் அட்லீ மனைவி அணிந்திருந்த உடையின் விலை: எவ்வளவு தெரியுமா?
ஆனந்த் அம்பானி திருமணத்தில் இயக்குனர் அட்லீயின் மனைவி அணிந்திருந்த உடையின் விலை பற்றி தகவல் வெளியாகியுள்ளது.
ஆனந்த் அம்பானி திருமணம்
ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் பிரமாண்டமாக நடந்துமுடிந்தது. இதில் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
சுமார் ரூ.5000 கோடி வரை செலவு செய்யப்பட்டு பல வகையான உணவுகள், விலையுயர்ந்த பரிசுப் பொருட்கள் என விருந்தினர்களை அம்பானி சந்தோஷத்தில் ஆழ்த்தினார்.
மேலும், இதில் தமிழகத்தில் உள்ள திரை பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்தத் திருமண விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு ரூ.2 கோடி மதிப்புடைய கை கடிகாரத்தை முகேஷ் அம்பானி பரிசாக வழங்கினார்.
இந்நிலையில், ஆனந்த் அம்பானி திருமண விழாவில் இயக்குனர் அட்லீயின் மனைவி அணிந்திருந்த உடை அனைவரின் கவனத்தையும் பெற்றது.
விலை எவ்வளவு?
அட்லீ தனது மனைவியின் உடையில் ஆனந்த் அம்பானியின் திருமணம் குறித்த வாசகத்தை காட்டி பலரது கவனத்தை ஈர்த்தார்.
இந்நிலையில் அவர் அந்தத் திருமணத்துக்கு அணிந்து சென்ற உடையின் விலை குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
அதன்படி ப்ரியா அட்லீ அணிந்து சென்ற அந்த ஆடையின் விலை மட்டும் ரூ. 3 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |