தவறான சிகிச்சையால் பறிபோன உயிர்! இளம் வீராங்கனையின் கடைசி பதிவு

Tamil nadu
By Fathima Nov 15, 2022 11:41 AM GMT
Report

தமிழகத்தில் தவறான சிகிச்சையால் கால் அகற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கால்பந்து வீராங்கனை பிரியா இன்று உயிரிழந்தார்.

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரது மகள் பிரியா(வயது 17). ராணிமேரி கல்லூரியில் படித்து வருகிறார், கால்பந்து போட்டியில் மாவட்ட மற்றும் மாநில அளவில் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில் மூட்டுவலி காரணமாக கொளத்தூர் பெரியார் நகர அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

காலில் அறுவைசிகிச்சை

அங்கு பிரியாவை பரிசோதித்த மருத்துவர்கள், வலது கால் மூட்டுப்பகுதியில் ஜவ்வு விலகியுள்ளதாக கூறி அறுவைசிகிச்சை செய்துள்ளனர்.

ஆனால் காலில் வீக்கம் ஏற்பட்டு உணர்வுகள் ஏதும் இல்லாமல் இருந்ததால் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பிரியாவை பரிசோதித்து பார்த்த போது, வலது காலில் ரத்தம் உறைந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தவறான சிகிச்சையால் பறிபோன உயிர்! இளம் வீராங்கனையின் கடைசி பதிவு | Priya Latest Status

மேலும் அதில் தொற்றுகள் அதிகம் இருந்ததால் உடல் முழுவதும் பரவாமல் இருக்க உடனடியாக அறுவை சிகிச்சை செய்து வலதுகாலின் முழங்கால் பகுதிக்கு கீழ் அகற்றப்பட்டது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பிரியா இன்று உயிரிழந்துள்ளார், மருத்துவர்களின் தவறான சிகிச்சையே காரணம் என பிரியாவின் பெற்றோர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மேலும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடைசி WhatsApp Status

இந்நிலையில் பிரியா கடைசியாக வாட்ஸ்அப்பில் வைத்த பதிவு வெளியாகியுள்ளது.

அதில், நான் சீக்கிரமே ரெடி ஆகி கம்பேக் கொடுப்போன், எதையும் நினைக்காதீர்கள், நான் மாஸ் என்ட்ரி கொடுப்பேன், என்னுடைய கேம் என்னை விட்டு போகாது, சீக்கிரம் வருவேன்னு நம்பிக்கையோடு இருங்க லவ் யூ ஆல் என தெரிவித்துள்ளார்.

தவறான சிகிச்சையால் பறிபோன உயிர்! இளம் வீராங்கனையின் கடைசி பதிவு | Priya Latest Status

அமைச்சர் சொல்வது என்ன?

பிரியாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், மருத்துவர்கள் கட்டுகட்டுவதில் கவனக்குறைவாக இருந்ததால் பிரியாவுக்கு ரத்தஓட்டம் தடைபட்டிருந்தது, இது அரசின் கவனத்துக்கு வந்தவுடன் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

2வது அறுவைசிகிச்சைக்கு பின் பிரியா நலமுடனே இருந்தார், அவருக்கு பெங்களூருவில் உள்ள பேட்டரி காலை பொருத்துவது என திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் ரத்த ஓட்டம் தடைபட்டிருந்ததால் சிறுநீரகம், இதயம் என ஒவ்வொன்றாக உள் உறுப்புகள் பாதிக்கப்பட்டு பிரியா உயிரிழந்துள்ளார்.

பிரியாவின் குடும்பத்துக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு தொகை வழங்க முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தவறான சிகிச்சையால் பறிபோன உயிர்! இளம் வீராங்கனையின் கடைசி பதிவு | Priya Latest Status

8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US