வைரம், மரகதம் கொண்டு 67 நாட்கள் தயாரிப்பு: பிரியங்கா சோப்ரா அணிந்திருந்த நெக்லஸ் விலை தெரியுமா?
தனது சகோதரரின் திருமணத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா அணிந்திருந்த நெக்லஸ் பேசு பொருளாகியுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட்டிலும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.
அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸை மணந்த இவர், தனது மகளுக்கு மல்ட்டி மேரி சோப்ரா ஜோனஸ் என பெயரிட்டார்.
இந்த நிலையில், பிரியங்கா சோப்ராவின் சகோதரர் சித்தார்த்திற்கு சமீபத்தில் நீலம் உபாத்யா என்பவருடன் திருமணம் நடந்தது.
இதில் கலந்துகொண்ட பிரியங்கா சோப்ராவின் நெக்லஸ் பற்றிய செய்திதான் வைரலாகியுள்ளது. அவர் அணிந்திருந்த நெக்லஸின் விலை ரூ.12 கோடி என்று கூறப்படுகிறது.
இதில் சிறப்பு என்னவென்றால், 1600 மணிநேரம் இதனை உருவாக்க செலவிடப்பட்டதாம். அதாவது 67 நாட்கள் இந்த நெக்லஸை தயாரிக்க எடுத்துக் கொண்டார்களாம்.
வைரம் மற்றும் மரகதம் கொண்டு இந்த நெக்லஸ் கண்கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |