ரூ 30 கோடி ஊதியம் பெறும் தமிழ்ப்பட நடிகை! இந்தியாவிலேயே இவர்தான் முதல் நபர்
பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா வாரணாசி படத்திற்காக பெறும் ஊதியம் மூலம், இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக மாறியுள்ளார்.
பிரம்மாண்டமாக உருவாகும் திரைப்படம்
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் வாரணாசி திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. 
இந்த திரைப்படத்தில் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா கதாநாயகியாக நடித்து வருகிறார். இதில் நடிப்பதற்காக பிரியங்கா சோப்ராவிற்கு ரூ.30 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன்மூலம் இந்தியாவிலேயே அதிக ஊதியம் பெறும் நடிகை எனும் பெயரை பிரியங்கா சோப்ரா பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
பிரியங்கா சோப்ரா
முன்னதாக, கல்கி 2898 படத்தில் நடித்ததற்காக தீபிகா படுகோனே ரூ.20 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்பட்டது. 
அவர் கல்கி இரண்டாம் பாகத்தில் இருந்து விலகிய நிலையில், அவரது கதாபாத்திரத்தில் பிரியங்கா சோப்ராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கிறது.
2002ஆம் ஆண்டில் தமிழில் வெளியான "தமிழன்" திரைப்படத்தின் மூலம் பிரியங்கா சோப்ரா திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |