பிரித்தானிய இளவரசர் வில்லியம் கேட் தம்பதியரை கண்டுகொள்ளாத இந்திய நடிகை... ரசிகர்கள் கொந்தளிப்பு
பிரித்தானியாவில், விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் ஆட்டத்தைக் காண இளவரசர் வில்லியமும் அவரது மனைவி கேட் மிடில்டனும் வந்தபோது, அவர்களை இந்திய நடிகை ஒருவர் அவமதித்ததாக ராஜ குடும்ப ரசிகர்கள் கொந்தளித்துப்போயுள்ளார்கள்.
அந்த நடிகை, பிரியங்கா சோப்ரா... கடந்த சனிக்கிழமை, விம்பிள்டன் மைதானத்தில் மகளிர் ஒற்றையர் ஆட்டம் ஒன்று நடைபெற்றது.
அதைக் காண்பதற்காக பிரித்தானிய இளவரசர் வில்லியம் தன் மனைவி கேட்டுடன் அங்கு வருகை புரிந்தார்.
VIPகளுக்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இடத்துக்கு அவர்கள் வந்தபோது, அங்கு உட்கார்ந்திருந்தவர்கள் கரகோஷம் எழுப்பி இளவரசர் தம்பதியை வரவேற்றார்கள்.
அப்போது, அங்கு உட்கார்ந்திருந்த இந்திய நடிகையான பிரியங்கா சோப்ரா, இளவரசர் தம்பதியரை கண்டுகொள்ளாமல் தன் பாட்டுக்கு தன் ஸ்கார்ஃபை சரி செய்வதுபோல் அமர்ந்திருந்தார்.
மற்றொரு இடத்திலும் அவர் வில்லியம் கேட்டை கண்டுகொள்ளாமல் வேறு பக்கம் திரும்பிக்கொள்ளும் காட்சிகளும் வெளியாகியுள்ளன. இந்த காட்சிகள் ராஜ குடும்ப ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளன.
என்ன மோசமான நடத்தை, பிரியங்கா சோப்ரா உட்பட சிலர், இளவரசர்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்களே என ஒருவர் கேள்வி எழுப்ப, மேகனுக்கு உண்மையாக இருப்பதை நிரூபிக்கிறார் போலும் என மற்றொருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆம், பிரியங்கா சோப்ரா, இளவரசர் ஹரியின் மனைவி மேகனின் நீண்ட கால மற்றும் நெருங்கிய தோழி ஆவார். ஆக, தன்னை இளவரசி கேட் அழவைத்ததாகவும், தனது உணர்வுகளை புண்படுத்தியதாகவும், தனது ஓபரா பேட்டியின்போது மேகன் பரபரப்பு புகார்களை தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம்.
ஆகவேதான், தன் தோழிக்காக பிரியங்கா, வில்லியம் கேட் தம்பதியரை கண்டுகொள்ளாமல் இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.