ரூ.160 கோடி மதிப்புள்ள சொந்த வீட்டில் இருந்து வெளியேறிய பிரியங்கா சோப்ரா.., நீர் கசிவால் வந்த சோதனை
லாஸ் ஏஞ்சலில் சொந்த வீட்டில் இருந்து நடிகை பிரியங்கா சோப்ராவும் அவரது கணவரும் அவசரமாக வெளியேறியுள்ளனர்.
பிரியங்கா சோப்ரா
நடிகர் விஜயின் ‘தமிழன்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. இவர், அமெரிக்க ராப் பாடகரான நிக் ஜோன்ஸைத் திருமணம் செய்து கொண்ட நிலையில் இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

தற்போது படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட பிரியங்கா சோப்ரா, தனது கணவர் மற்றும் மகளுடன் அமெரிக்காவில் உள்ள சொந்த வீட்டில் வசித்து வருகிறார்.
வீட்டை விட்டு வெளியேறிய தம்பதியினர்
கடந்த 2019 -ம் ஆண்டு அமெரிக்காவில் ரூ.160 கோடி மதிப்பீட்டில் சொந்த வீடு ஒன்றை பிரியங்கா சோப்ரா வாங்கினார். இந்த வீட்டில், 9 படுக்கையறைகள், தனியாக உடற்பயிற்சி கூடம், ஸ்பா செண்டர், நீச்சல் குளம், தியேட்டர், விளையாட்டுக்கூடம் என பிரம்மாண்டமான வசதிகள் உள்ளன.
இவர்கள் கடந்த 4 வருடங்களாக இந்த வீட்டில் வசித்து வந்த நிலையில், தற்போது பிரியங்கா சோப்ராவும் அவரது கணவரும் வீட்டை விட்டு வெளியேறியதாக தகவல்கள் வந்துள்ளது.

அந்த வீட்டில் கட்டுமான பணிகள் முறையாக செய்யப்படாததால் நீர்க்கசிவு ஏற்பட்டு வீட்டின் பெரும்பாலான பகுதிகளில் பூஞ்சைகளால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
தனது குடும்பத்தின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு பிரியங்கா சோப்ரா அவசரமாக அந்த வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். மேலும், கட்டுமான நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்து இழப்பீடு கேட்டுள்ளார்
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |