திடீரென நடந்து முடிந்த பிரியங்காவின் திருமணம்.., இருவரின் வயசு வித்தியாசம் என்ன?
விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றியதன் மூலம் பிரபலமானவர் பிரியங்கா தேஷ்பாண்டே.
பிரியங்கா தேஷ்பாண்டேவுக்கு கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் ஆனது.
இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பணியாற்றியபோது, அதில் தன்னுடன் பணியாற்றிய பிரவீன் என்பவரை காதலித்து கரம்பிடித்தார்.
பின் கடந்த 2022ஆம் ஆண்டு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து, இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
இந்நிலையில், விஜே பிரியங்கா தேஷ்பாண்டே நேற்று திடீரென இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
எந்தவித அறிவிப்பும் இன்றி அவர் டிஜே வசி என்பவரை மறுமணம் செய்திருக்கிறார்.
பிரியங்கா தேஷ்பாண்டே இரண்டாவது திருமணம் செய்த டிஜே வசி யார் என்பது தான் இணையத்தில் பலரும் தேடி வருகின்றனர்.
டிஜேவாக பணியாற்றி வருகிற வசி பல கார்பரேட் நிகழ்ச்சிகள் மற்றும் பப்புகளில் டிஜேவாக பணியாற்றி உள்ளார்.
மேலும், இவர் ஈவண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனி ஒன்றையும் சொந்தமாக நடத்தி வருகிறார்.
ஒரு நிகழ்ச்சி ஒன்றில் தான் பிரியங்காவுக்கும் வசிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறி இருக்கிறது.
அதன் பின்னர் இருவரும் குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
டிஜே வசிக்கு தற்போது 42 வயது ஆகிறது. அவரைவிட பிரியங்கா தேஷ்பாண்டே 10 வயது இளையவர். அவருக்கு தற்போது 32 வயது தான் ஆகிறது.
பிரியங்கா தேஷ்பாண்டே தன்னைவிட 10 வயது மூத்தவரை திருமணம் செய்துகொண்டுள்ள தகவல் தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |