பிரபல தொகுப்பாளினி பிரியங்காவின் அசரவைக்கும் சொத்து மதிப்பு.., அவரின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு?
விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி பிரியங்காவின் சொத்து மதிப்பு மற்றும் அவரின் ஒரு நாள் சம்பளம் பற்றி பார்க்கலாம்.
தொகுப்பாளினி பிரியங்கா
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே.
தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக கலக்கிக்கொண்டிருக்கும் பிரியங்கா, தன்னுடைய Youtube சேனல் மூலமாக ரசிகர்களை மகிழ வைத்து வருகிறார்.
இந்நிலையில், பல லட்சம் ரசிகர்கள் மனத்தில் தனக்கென்று தனி இடத்தை பிரியங்கா பிடித்துள்ளார்.
இதற்கிடையில், தொகுப்பாளினி பிரியங்காவின் சொத்து மதிப்பு ரூ. 10 கோடி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இவர் ஒரு எபிசோட் தொகுத்து வழங்க ரூ. 2 லட்சம் முதல் ரூ. 2.5 லட்சம் சம்பளம் வாங்கி வருகிறார் என கூறப்படுகிறது.
Youtube சேனலில் 1.50 மில்லியன் Subscribers வைத்திருக்கும் பிரியங்கா, அதன் மூலம் ஒரு வருடத்திற்கு லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டி வருகிறார் என சொல்லப்படுகிறது.
மேலும், சென்னையில் இவருக்கு சொந்தமாக வீடு ஒன்று இருக்கிறது.
You May Like This Video
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |