எம்பியான பிறகு முதல்முறையாக அண்ணனுடன் சேர்ந்து வயநாடு வந்த பிரியங்கா காந்தி
காங்கிரஸ் பொது செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பிரியங்கா காந்தி எம்பியான பிறகு முதல்முறையாக வயநாட்டிற்கு வருகை தந்துள்ளார்.
வயநாடு வந்த பிரியங்கா காந்தி
கேரளாவில் உள்ள வயநாடு மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.
பின்னர், தான் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், சகோதரருமான ராகுல் காந்தியிடம் காண்பித்து மகிழ்ச்சி அடைந்தார்.
கேரளாவின் பாரம்பரிய கசவு சேலை அணிந்து நாடாளுமன்ற மக்களவையில் எம்.பி.யாக பிரியங்கா காந்தி பதவியேற்றார்.
இதையடுத்து, இன்று பிரியங்கா காந்தியும் அவரது சகோதரரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தியும் வயநாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
வயநாட்டில் உள்ள கருளை, வண்டூர் மற்றும் எடவண்ணா ஆகிய இடங்களில் நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சிகளில் இருவரும் கலந்து கொள்கின்றனர்.
அதனை தொடர்ந்து கோழிக்கோடு மாவட்டம் திருவம்பாடி சட்டமன்றத் தொகுதியில் உள்ள முக்கத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் கலந்து கொள்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |