நீண்ட நாள் காதலியுடன் பிரியங்கா காந்தியின் மகனுக்கு நிச்சயதார்த்தம்: யார் அந்த பெண்?
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் மகன், விரைவில் தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்துகொள்ள உள்ளார்.
பிரியங்கா காந்தியின் மகன்
நாடாளுமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தியின் மகன் ரெஹான் வாத்ரா.

புகைப்படக் கலைஞரான இவர், ஏழு ஆண்டுகளாக அவிவா பெய்க் என்ற பெண்ணை காதலித்து வருகிறார்.
இந்த நிலையில், இவர்களின் காதலுக்கு இருவரின் குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து நேற்றைய தினம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

ரெஹான் வாத்ரா தனது 7 ஆண்டுகால காதலியான அவிவா பெய்கை திருமணம் செய்ய முன்மொழிந்தார். அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து காதல் ஜோடியின் நிச்சயதார்த்தம் முடிந்தது. ராஜஸ்தானின் ரந்தம்பூரில் விரிவான நிச்சயதார்த்த விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யாரிந்த அவிவா?
தொழிலதிபர் இம்ரான் பெய்க்கின் மகளான அவிவாவும் ஒரு புகைப்படக் கலைஞர் ஆவார். இவர் தனது குடும்பத்துடன் டெல்லியில் வசித்து வருகிறார்.
இவரும் ரெஹானும் ஒரே பாடசாலையில் படித்தவர்கள் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அவிவாவின் தாயான நந்திதா பெய்க் Interior Designer ஆவார். இவர் காங்கிரஸ் தலைமையகம் இந்திரா பவனின் Interior Designerயில் பிரியங்கா காந்திக்கு உதவியதாகவும், அவருடைய நீண்ட நாள் தோழி என்றும் கூறப்படுகிறது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |