கேரளாவின் பாரம்பரிய புடவை அணிந்து பதவியேற்றார் பிரியங்கா காந்தி
கேரளாவின் பாரம்பரிய கசவு சேலை அணிந்து மக்களவையில் எம்.பி.யாக பிரியங்கா காந்தி பதவியேற்றார்.
பதவியேற்றார் பிரியங்கா காந்தி:
கேரளாவில் உள்ள வயநாடு மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.
இந்திய கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் திட்டங்களுக்கு தொழில்நுட்பம் வழங்கும் பிரான்ஸ்.., அதன் சிறப்புகள்
பின்னர், தான் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், சகோதரருமான ராகுல் காந்தியிடம் காண்பித்து மகிழ்ச்சி அடைந்தார்.
இந்நிலையில், இன்று கேரளாவின் பாரம்பரிய கசவு சேலை அணிந்து நாடாளுமன்ற மக்களவையில் எம்.பி.யாக பிரியங்கா காந்தி பதவியேற்றார்.
மக்களவை உறுப்பினரான பிரியங்கா காந்திக்கு சபாநாயகர் ஓம் பிர்லா பதவிப்பிரமானம் செய்து வைத்தார்.
பின்னர் அவர், அரசியல் சாசன புத்தகத்தை கையில் வைத்து எம்பியாக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |